கடைசி பகுதியில் அஜய் மதியின் காதல் தெரிந்து ராகவி மகிழ்கிறாள். லட்சுமி ராகவியை திட்டி கிளம்பி வர சொல்கிறார். மதி ராகவியை அழகாக அலங்காரம் செய்து அழைத்து வர ராகவியை பார்த்த சக்தியோ மெய்மறந்து அவளையே பார்க்கிறான். இருவரும் கண்களால் காதல் செய்ய லட்சுமி சாப்பிட அழைத்தார். இருவரும் சாப்பிட்டு செல்ல சக்தியின் கோபம் குறைந்து விட்டது என நினைக்க சக்தி மீண்டும் கோபத்துடன் பேசி சென்றான். மதியும் அஜய்யும் அவளை சமாதானம் செய்ய சக்தி தனிமையில் வருந்தினான்...
சக்தி ராகவியின் அறையில் இருக்க மதி அஜய்யின் சமாதானத்தில் கொஞ்சம் தெளிந்த முகத்துடன் அவளது அறைக்கு வந்தாள். சக்தியோ பால்கனியில் நின்று வெளியில் பார்த்து கொண்டிருக்க ராகவியும் அங்கே சென்றாள். அவள் வருவது தெரிந்தும் அமைதியாக நின்றிருந்தான் அவளின் காதல் கணவன். ராகவி சென்று சக்தியை அழைத்தாள்..
ராகவி " மாமா! " அவன் அப்டியே நிற்க மீண்டும் அழைத்தாள். மாமா! இம்முறை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் வெளியே பார்த்தான். ராகவியோ கொஞ்சம் கூட கோபமின்றி மீண்டும் மாமா என்றழைக்க சக்திக்கு கோபம் வந்துவிட்டது😜..
சக்தி " ஏய் எதுக்குடி இப்போ சும்மா மாமா மாமாங்குற 😠 " என் புருஷன நான் கூப்டுறன் 😏 உனக்கு என்னடா? ஏய் என்னடி டா போட்டு பேசுற? நான் அவன் கிட்ட இருந்து காப்பாத்த தான் தாலி கட்டுனன் 😏! ஓஓ காப்பாத்த கட்டுனியா! ஆமாடி இல்லண்ணா உன்ன கல்யாணம் பண்ண கூட எனக்கு விருப்பம் இல்ல! அடடா அப்போ என் இடத்துல வேர ஓரு பொண்ணா இருந்தாலும் தாலி கட்டிருப்பல்ல மாமா? இந்த கேள்வியை அவனே எதிர் பாக்கவில்லை! 😲அதிர்ச்சியாக அவளை பார்க்க ராகவி மீண்டு கேட்டாள்!
ராகவி " சொல்லு மாமா " சக்தியிம் சளைக்காமல் பதிலௌ கூறினான். ஆமாடி கட்டிருப்பன் 😠! என்ன பண்ண முடியும் உன்னால? இந்த பதிலில் ராகவியின் மனம் வலித்தாலும் அதை முகத்தில் காட்டமல் பேசினாள்! அப்போ கல்யாணம் பண்ணிருப்ப அப்டிதான 😏? ஆமாடி பண்ணிருப்பன்! உன்ன விருப்பம் இல்லாம தான் கல்யாணம் பண்ணண் 😠!