கடைசி பகுதியில் ராகவி கர்ப்பம் ஆக இருப்பது தெரிந்து அனைவரும் மகிழ அந்த நாள் இனிய நாளாக முடிந்தது...
அஜய் மதியின் கல்யாண வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்க சக்தியோ ராகவியை தரையில் கூட விடாமல் தாங்க அவன் அன்பில் ராகவி திணறித்தான் போனாள்.
ராகவி " மாமா கொஞ்ச நேரம் கீழ போலாம் மாமா ரூம்குள்ளேயே இருக்க ஒரு மாறி இருக்கு " என்று சக்தியிடம் கேட்க அவனோ " என்ன பாப்பா நீ ஒழுங்கா தூங்கு டி " என்று கூறினான்.
ராகவி " அச்சோ மாமா எவ்ளோ நேரம் தான் தூங்குறது " என்று சலித்து கொள்ள சக்தி அவளை தன் கை அணைப்பில் உறங்க வைத்தான்.
மதி அவள் வீட்டில் இருக்க அஜய் அவளை பார்க்க கூடாது என்று சொல்லியதால் கடுப்பில் சுற்றி கொண்டிருந்தான். மித்து தன்னவளின் நினைவில் இருக்க அவன் அன்னையோ தன் மகனை புரிந்து சிரித்து கொண்டார்.
நாட்கள் இப்படியே கடக்க அஜய் மதியின் திருமண நாளும் வந்தது. சக்தி மதிக்கு அலங்காரம் பண்ணி கொண்டிருக்க மதியோ அவளை திட்டி கொண்டிருந்தாள்.
மதி " ஏண்டி இந்த நிலைமைல நீ இப்டி பண்ணிட்டு இருக்க உக்காரு டி போய் " என்று தன் தோழியின் மீது உள்ள கவலையில் பேச அவள் அன்பில் மகிழ்தவளோ " அதெல்லாம் முடியாது என் அண்ணிக்கு நான் தான் எல்லாம் செஞ்சி விடுவன் " என்று அடம்பிடுத்து அவளே அதை செய்து முடிக்கவும் சக்தி கையில் பழ சாறுடன் வரவும் சரியாக இருந்தது.
சக்தி " பாப்பா இந்த குடிச்சிட்டு அப்றம் பண்ணு எதுவா இருந்தாலும் " என்று கூற அவளோ அவனை தீயாய் முறைத்து கொண்டிருந்தாள். ராகவி " இப்போதான மாமா குடுத்த " என்று சிணுங்க மதி இருவரையும் பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்.
சாய் அந்த நேரம் அங்கு வர அந்த நேரம் அழகாக செல்ல மாப்பிள்ளையை மேடைக்கு அழைத்தனர். அஜய் மேடைக்கு வர அங்குள்ள அனைவருமே அவனை தான் பார்த்து கொண்டிருந்தனர்.