கடைசி பகுதியில் சக்தியின் அத்தை சக்தி ராகவியின் கல்யாணத்தை பற்றி பேச ராகவி வருத்தபட சக்தி அவரை திட்டிவிட்டி ராகவியை அழைத்து கொண்டு சென்றுவிட்டான். சக்தி அவளை சமாதனம் செய்ய அழுது கொண்டே இருந்தவளை அஜய்யும் மதியும் சமாதானம் செய்தனர். அஜய் மதி பேசுவதை யாரோ கேட்கிறார்கள். மித்ரன் தாயுடன் இருக்கிறான். வரவேற்பு நாள் வர இருவரையும் தனியாக அழைத்து சென்றனர்.
அனைவரும் வரவேற்பு நடக்கும் மண்டபத்திற்கு சென்றனர். இருவரையும் வரவேற்க தனி அறையில் இருவரும் இருந்தனர். ராகவியின் தந்தை அணைத்து வேலைகளையும் பார்க்க அஜய் சக்தியுடனும் மதி ராகவியுடனும் இருந்தனர். வரவேற்பு நேரம் வர விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர்.
சக்தியை அஜய் அழைத்து வர கம்பீரமான ஆண்மகனாக அழகாக இருந்தான் 😍. இளம்பெண்கள் அவனையே பார்க்க அவனோ அவளின் காதல் நாயகியை எதிர்பார்த்து காத்திருந்தான் கண்களில் காதலுடன் 😍. அவன் எதிர்பார்ப்பை பொய் ஆக்கமால் வந்தாள் அவனின் காதல் மனைவி ☺.
ராகவி தன்னவன் வாங்கி கொடுத்த சேலையிலும் அவன் காதலிலும் தேவதையாய் இருக்க சக்தியால் அவளை விட்டு கண்ணை எடுக்கவே முடியவில்லை 😍. அவன் அப்படியே நிற்க மதியோ ராகவியை பேசியே சிவக்க வைத்தாள் 😜. ராகவியை சக்தியின் அருகில் நிற்க வைக்க சக்தி அவளிடம் பேசினான் 😉.