கடைசி பகுதியில் அஜய் சக்தி ராகவி இருக்கும் இடம் தெரிஞ்சு போய் பார்க்கிறார்கள். ஆனா தேஜா சந்தேகத்தால் இடத்தை மாற்றி விட்டான். அஜய்யும் சக்தியும் அந்த இடத்தில் ஓரு பையனின் உதவியால் அந்த ஊர் நோக்கி செல்கிறார்கள். தேஜா திருமண ஏற்பாட்டை செய்கிறான். திருமணம் நடக்கும் இடம் நோக்கி அஜய்யும் சக்தியும் செல்லும் பொழுது துப்பாக்கி சுடும் சத்தத்தால் அதிர்ச்சியாகி நின்றனர்..
சக்தி அஜய்யிடம் சொல்கிறான். டேய் என்னடா கன் சவுண்ட்லா கேக்குது 😰 எனக்கு என்னவோ பயமா இருக்குடா! அதெல்லாம் ஓன்னும் இல்ல வா போலாம் 😥 என்று கூறி அஜய் சக்தியை கோவிலில் திருமணம் நடக்கும் இடம் நோக்கி இழுத்து சென்றான்.
இருவரும் அங்கு சென்ற நேரத்தில் தேஜாவின் கையில் துப்பாக்கியுடன் ராகவியின் நெற்றி பொட்டில் வைத்திருந்தான்😥. அதை பார்த்த சக்தி கத்தி கொண்டே தேஜாவிடம் சென்றான்.
சக்தி " டேய் தேஜா வேனா அவள ஓன்னும் பண்ணாத விட்ரு 😰 " டேய் சக்தி வாடா வா உன்ன தான் எதிர் பார்த்துட்டு இருந்தன் 😠. தேஜா எதுவா இருந்தாலும் கன்ன ஏறக்கிட்டு பேசு 😠. என்னடா அவ்ளோ பயமா 😃 அப்ப எதுக்கு டா ஆளுங்கள அனுப்புன😠.
தேஜா கூறியது புரியாமல் சக்தி மீண்டும் தேஜாவிடம் பேசினான். இல்ல நான் யாரையும் அனுப்பல 😨. ஏன்டா பொய் சொல்ற 😠 அப்போ இவங்களாம் யாரு என்று அங்கு சுத்தி நின்ற ஆட்களை காமித்தான். சக்தியோ எதுவும் புரியாமல் அங்கு பார்க்க அஜய்க்கு ஏதோ புரிவது போல் இருந்தது😰.
தேஜா " சொல்லுடா நீ அனுப்புன ஆட்கள் தான இவனுங்களாம் 😠 " இல்ல நான் யாரையும் அனுப்பல என்று சக்தி கூறி கொண்டிருக்க ராகவியின் முகமோ எந்த வித பதட்டமோ பயமோ இன்றி நிர்மலமாக இருந்தது 😊. அஜய் ராகவியை நோக்க அவளும் அவனையே பார்த்தாள். அஜய் கண்ளால் ஏதோ கேட்க அதற்கு ராகவியும் ஆமாம் என்பது போல கண்ணை மூடி திறந்தாள். ராகவி கூறிவிட்டு சற்று முன்பு நடந்ததை நினைத்து பார்த்தாள்.