மாயவனின் மலரவள் 11

865 35 9
                                    

கடைசி பகுதியில் சக்தி மதி வரவேற்பு நடந்தது. மித்ரனும் வரவேற்புக்கு வந்து சென்றான். சக்தி மித்ரனை பார்த்து அதிர்ச்சியானலும் ஏதும் காட்டிக்கொள்ளவில்லை. மித்ரனின் அலுவலகத்தில் மித்ரனை சந்திக்க ஓரு பெண் வருகிறாள்.  மண்டபத்தில் அஜய்யின் தந்தை ஏதோ சொல்கிறார்.  அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். 

அஜய்தான் முதலில் அதிர்ச்சியில் இருந்து தெளிந்தது. அவன் ஓடி சென்று அவன் தந்தையை கட்டிக்கொண்டு பேசினான் ☺!

அஜய் " அப்பா ரொம்ப தாங்ஸ்ப்பா என்று கண்ணீருடன் அவன் கூற அவர் சிரித்து கொண்டே அவன் தலையை தடவினார்😃. மதியும் மகிழ்ச்சியில் அவள் தந்தையை பார்க்க அவரும் சம்மதமாக தலை அசைக்க அவளுக்கும் அத்தனை சந்தோஷம் அதில் 😄!

சக்தி ராகவிக்கு கூட இந்த விஷயம் ஆனந்த அதிர்ச்சிதான். ஆனால் ஓருத்தி மட்டும் கோபத்தில் எரிந்து கொண்டிருந்தாள் 😠. விட்டாள் எரித்து விடுவாள் போலும் அத்தனை கோபம் அவள் கண்களிள்!

அவள் பிரதிக்ஷா ( Prathiksha) அஜய்யின் மாமான் மகள். அஜய்யின் மேல் காதல் என்று சொல்லி கொள்வாள். காதல் தான என்பது அவளுக்கும் தெரியாது மத்தவர்களுக்கும் தெரியாது 😏. அவள் கோபமாக அஜய்யின் தந்தையிடம் பேசினாள் 😠.

பிரதி " மாமா நான் உங்கள்ட்ட என்ன சொன்னன் 😠 நீங்க என்ன பண்றீங்க?  " என்று பார்க்க அவரும் அவளை தான் பார்த்தார். என்ன மாமா பதில் சொல்லாம நிக்கிறீங்க😠. அவள் பேசுவது ஓன்றும் புரியாததால் அனைவரும் அவளையே பார்த்தனர்.

முருகன் " என்னம்மா கேட்ட? " அஜய்யின் தந்தை கேட்டார். சற்று முன்பு நடந்ததை யோசித்து கேட்டார் அவர்.

சற்று முன்பு சக்தி ராகவியை சாப்பிட அழைத்து செல்ல முருகன் விருந்தினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்!  அப்போது அங்கே வந்த பிரதி அவரிடம் பேச வேண்டும் என அழைக்க அவரும் சென்றார்!

மாயவனின் மலரவள் (Completed)Where stories live. Discover now