கடைசி பகுதியில் சக்திக்கு மித்ரனின் தந்தை பற்றி தெரிய வருகிறது. ராகவி அலுவலகத்தில் யாரோ வந்திருப்பதாகா கூற அவர்கள் சொன்ன விஷயத்தில் அவர்களுடனே கிளம்பினாள். மித்ரன் சாய் நேத்ராவுடன் கனவிலே இருந்தான்.......
சக்தி மித்ரனின் தந்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக மித்ரனின் இல்லம் நோக்கி கிளம்பினான். ராகவியும் அவர்களுடன் மித்ரன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாள்🥺. ஆம் அவர்கள் குறியது மித்ரன் பற்றியது தான்.
சக்தி மித்ரன் வீட்டை நோக்கி சென்றான். அந்த நேரம் அவனுக்கு பழைய நினைவுகள் அனைத்தும் கன் முன் தோன்றியது 🥺. மறக்க கூடிய நினைவுகளை அவை அனைத்தும் அவனை கண் கலங்க வைத்தது😢. அதை நினைத்து கொண்டே அவன் வந்து விட்டான் மித்ரன் வீட்டிற்கு.
வீட்டு வாசல் வரை வந்தவனாள் உள்ளே செல்ல முடிய வில்லை. ஆனால் கல்லூரி காலததில் அத்தனை உரிமையாக இருந்த வீடு அது அதை நினைத்து கொண்டே உள்ளே சென்றான். மித்ரனின் தாய் வரவேற்பறை அமர்ந்து இருந்தார். அவரை அந்த நிலையில் பார்க்க சக்திக்கு மிகவும் கவலையாக இருந்தது.
அப்போது தான் அவரும் சக்தியை கவனித்தார். அவனை பார்த்தவுடன் அவர் முகம் பூவாக மலர்ந்தது 😊. வாடா சக்தி இபோதான் இங்க வாடா வழி தெரிந்ததா என்று அன்னைக்கே உண்டான செல்ல கோவத்துடன் கேட்டார் 🤨.
சக்தி ஓடி சென்று அவரை கட்டி கொண் டான். அம்மா 😢. அச்சோ என்னடா கண்ணா சின்ன புள்ள மாதிரி என்று அவன் தலையை வருடினார். சக்திக்கு கண்ணில் தண்ணீர் நிக்காமல் வலிந்து கொண்டே இருந்தது 😰.
இவர்கள் நின்று கொண்டிருக்கும் நேரம் மித்ரன் அங்கே வந்தான். அவனுக்கும் இது அதிர்ச்சி தான் ஆனால் ஆனந்த அதிர்ச்சி அவனுக்கு😀. அவர்கள் இருவரின் பாசபினைப்பை பார்க்க பார்க்க திகட்டவில்லை 😀. அதே நேரம் அங்கே வந்தாள் சக்தியின் காதல் மனைவி ராகவி 😀.