கடைசி பகுதியில் அஜய் கதவை திறக்க அங்கு நின்றவளை பார்த்து அதிர்ந்து நின்றான்....
அஜய் இன்னும் காணோம் என்று வந்த சக்தியும் அவர்களை புரியாமல் பார்க்க ராகவி மதியும் வந்தனர். ராகவி நக்கல் பார்வை பார்க்க மதிக்கு ஏனோ மனதுக்குள் தப்பாக தோன்ற ஒரு வித கலக்கத்துடனே நின்றாள்.
அங்கு பிரதி ரித்வியுடன் வந்திருக்க இருவரும் நக்கலாக பார்க்க பிரதீ பேச ஆரம்பித்தாள். பிரதி " என்ன நாலுபேரும் அப்டியா அதிர்ச்சியா பாக்குறீங்க நான் ஏன் திடீர்னு வந்தனு பாக்குறீங்களோ " என்று கேட்க நா கதிகோ இவள் பேச்சி எரிச்சலைக் கொடுக்க அஜய்யும் சக்தியும் வெற்றியுடன் வந்ததை பார்த்து குழம்பி நின்றனர்.
ராகவி " இப்ப நீ எதுக்கு வந்த ன்னு சொல்ல போறியா இல்லையா " என்று எரிச்சல் குரலில் கேட்க ரித்விக்கு அவள் பேச்சில் கோபம் வந்தது.
ரித்வி " ஹே என்ன சும்மா கத்துக்கிட்டு இருக்கே " என்று அவள் பேச்சில் ஏற்பட்ட கோவத்தில் பேச சக்தியின் முறைப்பில் அடங்கினான். அஜய் " என்னடா பட்டதெல்லாம் போதாதா புதுசா இவ கூட சேர்ந்து ஆட்டம் போட்டுட்டு இருக்க " என்று அவனை பார்த்து கேட்க ரித்வி பேசினான்.
ரித்வி " நான் ஒன்னும் சும்மா கத்தல " என்று கூற ராகவியோ " பின்ன என்ன காரணத்தோடு கத்திட்டு இருக்கியா " என்று நக்கலடிக்க இந்த முறை பிரதி ரித்வி இருவருக்குமே கோபம் பன்மடங்கு ஆனது.
ரித்வி " இங்க பாரு நான் ஒன்னும் சும்மா உங்க கிட்ட சண்டை போட வரல இங்க இருக்கிற மதி என்ன லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திட்டு இப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்க பார்க்கிறா " என்று கூற அஜய் கோவமாக அவன் சட்டையை பற்றினான்.