கடைசி பகுதியில் ராகவி சக்தி சேர்ந்துவிட்டனர். அஜய் மதி இருவரும் ராகவியை தேடி வர சக்தி ராகவி சேர்ந்தது தெரியவந்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் பேசிவிட்டு செல்ல அதே மகிழ்ச்சியுடனும் காதலை திரும்ப பெற்ற திரும்பிதியிலும் இருவரும் பேசி கொண்டு உறங்கினர். அங்கு யாரே சக்தியை கொல்வதாக கோபமாக கத்தினான்...
சக்தியும் ராகவியும் தங்கள் காதல் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் கட்டிபிடித்து உறங்கி கொண்டிருந்தனர் 😍! நிலவின் ஓளிக் கூட வெட்கப்பட்டு சென்றது போலும் இவர்களின் காதலின் ஆழத்தில்! இவர்கள் இப்படி இருக்க ராகவியின் அறையை விட்டு சென்ற அஜய்யும் மதியும் அவர்கள் காதல் உலகத்தில் இருந்தனர்😉!
அஜய் " மதிக்குட்டி இன்னிக்கு இங்கயே தங்குடி 😚 " ஹான் 😳 அதெல்லாம் முடியாது போடா அம்மா அப்பா திட்டுவாங்க! மதிம்மா 😞. டேய் என்னடா சின்ன பிள்ளை மாறி பண்ணிட்டு 😞! போடி இன்னிக்கு உன்கிட்ட சந்தோஷமா பேசலாம்னு பாத்தா நீ போறங்குற 😏! அஜய் என் செல்லம்ல அம்மா அப்பா எதிர்பாத்துட்டு இருப்பாங்க டா 😥.
அஜய் " போடி 😏 " அஜய் செல்லமாக கோபத்தில் முகம் திருப்ப மதிக்கு வளர்ந்த குழந்தை போல தான் தெரிந்தான் 😍! கை கூடுமா என்று தெரியாத போதும் அவன் மேல் உயிரையே வைத்தவள் ஆயிற்றே! இப்பொழுது கேட்காவா வேணும் 😍!சிறுபிள்ளை போலே செய்யும் அவனை பார்க்க அவளுக்கு அணைத்து கொஞ்சத்தான் தோன்றியது 😚!
மதி " அச்சோ என் செல்லம் 😘 " என்று மதி அவனை கட்டிக்கொள்ள அஜய்க்கு செல்ல கோபம் கூட காணமல் போனது 😍! மதிம்மா என்று அவளை அணைத்து நெற்றியில் இதழ் பதிக்க மதிக்கு தன்னவனின் மார்பில் சுகமாக சாய்ந்து கொண்டாள்! இவர்கள் இவ்வாறு இருக்க லெட்சுமி கூப்பிடும் சத்தம் கேட்க அவசரமாக விலகினர். விலகும் அவசரத்தில் அவளது முடியில் அஜய்யின் ஜெயின் மாட்டிக்கொண்டது 😜!