கடைசி பகுதியில் சக்தி ராகவி இருவரும் தங்கள் நாளை மித்துவுடன் கழிக்க அன்றைய தினம் முடிந்தது.
அடுத்த நாள் அழகாக விடிய ராகவி சக்தியின் நெஞ்சில் உறங்கி கொண்டிருந்தாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காதது போல் அணைத்து கொண்டு உறங்க ஏனோ ஆதவனுக்கு இவர்களை பார்க்க கோவம் போலும். தன் ஒளியால் அவர்களை எழுப்ப முயல ஆனால் அவர்களோ தங்கள் இணையை பிரிய கூட முடியாமல் மேலும் அணைத்து கொண்டு உறங்கினர்🤗.
ஆதவனும் அவர்கள் செயலில் வெக்கம் கொள்ள அந்த நாள் அழகாக விடிந்தது. இவர்கள் இவ்வாறு இருக்க அஜய் மதி கனவிலே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர். அஜய் அசதியில் உறங்கி கொண்டிருக்க அவன் கனவில் முழுதும் தன்னவனை காதல் இம்சை செய்து கொண்டிருந்தாள் அவனின் ஆசை காதலி😁.
அஜய் "என்னடி தூக்கத்துலயும் விட மாட்ற😣" என புலம்பி கொண்டே எழ அவனின் காபி கொடுக்க வந்த அஜயின் தாய் அவனை கண்டு புன்னகைத்து கொண்டே கொடுத்து சென்றார். அஜய் "அச்சோ அம்மா இவளால அம்மா என்ன பாத்து சிரிச்சிட்டு போறாங்க பாரு ராட்சசி இருக்குடி உனக்கு😣" என்று சிரித்து கொண்டே அவன் காலை வேலைகளை முடிக்க சென்றான்.
மதி அவள் வீட்டில் உறங்கி கொண்டிருக்க கனவில் அஜயின் காதல் தொல்லைகளால் சிணுங்கி கொண்டே எழ அவனின் காதல் கள்வனின் நினைவுகள் அவள் மனதில் நிறைய அதே மோன நிலையில் அவள் குளிக்க சென்றாள்💖.
ராகவியே முதலில் எழ தன்னவன் குழந்தை போல் உறங்க அவனை ரசித்து கொண்டே நெற்றியில் தன் இதழை பதிக்க😘 அவள் ஸ்பரிசத்தில் அவன் தூக்கத்தில் இருந்து விழித்து கொள்ள அவளை அவ்வளவு நெருக்கத்தில் காண சிரித்து கொண்டே அவள் இதழில் தன் இதழை பதிக்க இருவரின் காலை வேளை காதல் வேளையாக மாறியது😉.
ராகவி முதலில் அவனின் திடீர் தாக்குதலில் நிலை தடுமாற அவனின் நெஞ்சில் விழ சக்தி அவள் இடையில் கை வைத்து பிடிக்க அவன் மீதே சரிந்தாள் அவள். ராகவி "அச்சோ மாமா விடு டா😣" என்று சினுங்க அதை பார்த்த பின்னும் விடுவானா அவளின் காதல் கணவன்😁. சக்தி "எங்க பாப்பா போற😃" என்று சிரித்து கொண்டே கேட்டான். ராகவி "மாமா மணி ஆகிட்டு விடு டா அத்தை தனியா இருப்பாங்க😣" என்று கூறி கொண்டே அவனிடம் இருந்து விடு பட முயல அவனோ அவளின் இடையில் உள்ள கையை மேலும் இருக்க ராகவி மீண்டும் அவன் மேலே விழுந்தாள்.