மாயவனின் மலரவள் 18

666 18 3
                                    

கடைசி பகுதியில் மித்துவின் மூலம் பிரதியை பற்றி தெரிந்து கொள்ள அனைத்து பிரச்சினைகளும் முடிந்தது.  எல்லாம் முடிந்து ராகவி கீழே கீழே இறங்க தலைசுற்றல் ஆக இருக்க மயங்கி சாய்ந்தாள்....

ராகவி மயங்கி சரிய அந்த நேரம் சக்தி போன் பேச சென்றுவிட அவள் மயங்குவது அவனுக்கு தெரியாமல் போக ராகவி மயங்கி கீழே விழும் நேரம் அஜய் மதுவை சமாதானப்படுத்தி விட்டு வெளியே அவளை பார்த்து கொண்டே அவளிடம் ஓடினான்.

அஜய் " ஐயோ அம்மு" என்று கத்திக் கொண்டே ஓடி அவளை பிடிக்க அவன் சத்தத்தில் மதி சக்தி மித்து அனைவரும் அங்கே வந்தனர்.  சக்தியோ ராகவியை அப்படி பார்த்த அதிர்ச்சியில் நிற்க மதியும் இதுவும் அவளிடம் சென்றனர்.

மித்து " டேய் என்னாச்சுடா அவளுக்கு " எங்க பதட்டத்துடன் கேட்க அஜய்யும் அதே பதட்டத்துடன் அவனுக்கு பதில் கூறினார்.  அஜய் " தெரில டா நானும் இப்போதான் அவளை பாத்தான் "

மதி " ராகவி என்னாச்சி டி உனக்கு " என்ன அழுது கொண்டே அவள் கண்ணத்தில் தட்ட ராகவி அப்போதும் எழுந்து கொள்ளவில்லை. 

மித்து " டேய் சக்தி என்னடா பாத்துட்டே நிக்கிற வாடா இங்க " சக்தியை அழைக்க சக்தியோ பயத்தில் எதுவும் புரியாமல் நின்றான்.  மித்துவிற்கு அவன் நிலை புரிய வேகமாக அவனிடம் வந்து அவன் தோளில் கை வைக்க அப்போது தான் நினைவிற்கு வந்தான். 

சக்தி " என்னாச்சுடா என் பாப்பாக்கு " என்று கண்கள் கலங்கி அவளிடம் செல்ல அவன் நிலையைப் பார்த்து அனைவருக்குமே கண்ணில் கண்ணீர் வந்தது.  அஜய் " மதி தண்ணி எடுத்துட்டு வா தெளிச்சு பார்ப்போம் " என்று சொல்ல வேகமாக தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். 

சக்தி " பாப்பா இங்க பாருடி " என்று அவள் முகத்தை வருட அவளோ  சுயநினைவின்றி கிடந்தாள்.  அஜய் தண்ணீரை தெளிக்க அப்பொழுதும் எழாமல் இருக்க மூவருக்குமே பயம் வந்தது. 

மாயவனின் மலரவள் (Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ