கடைசி பகுதியில் சக்தி ராகவி வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டனர். மித்ரனுக்கு சாய் நேத்ராவை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. பிரதி அஜய்க்கு எதிரே சதி செய்ய நினைத்தாள் ....
மித்ரன் அன்று முழுவதும் சாய்யின் நினைவே அவனை ஆனந்தமாக ஆட்கொண்டது 😍. இவன் இவ்வாறு இருக்க சக்தி ராகவி மதிய வேலையிலே ரெடியாகி வந்தனர்.
அஜய் மதி பெற்றோர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருக்க இவர்கள் வருவதை கண்டனர்! ராகவியின் கண்ண சிவப்பே சொன்னது அவளின் மகிழ்ச்சியை ☺! பெற்றோர்கள் மகிழ்ச்சியாக எழுந்து அவர்களுக்கு உணவு ரெடி பண்ண செல்ல இருவரும் அஜய் மதி உடன் சேர்ந்து கொண்டனர் 😃. மதி அஜய் இருவரும் சக்தி ராகவியை கலாய்த்து கொண்டிருக்க லட்சுமி சாப்பிட அழைத்தார்.
ஏற்கனவே சிவந்த கண்ணங்கள் மதியின் கேலியிள் இன்னும் சிவந்திருந்தது 😍. சக்தி அவளையே பார்க்க அஜய் அவனை தோல் தட்டி நிகழ் உலகிற்கு கொண்டுவந்தான் 😉.
சாப்பிட்டு அனைவரும் பேசி கொண்டிருக்க மாலை வேலையில் கோவிலுக்கு சென்றனர். அங்கும் இளையோர்கள் மகிழ்ச்சியாக இருக்க பிரதி அதை கோபத்தில் பார்த்து கொண்டிருந்தாள் 😠! அந்த நாள் இரவை அடைய மீண்டும் சக்தி ராகவியின் காதல் யுத்தம் கட்டிலில் தொடங்கியது.
மறுநாள் சக்தி ராகவி சக்தியின் வீட்டிற்கு புறப்பட்டனர். ராகவிக்கு தாய் தந்தையையும் இன்னொரு தந்தையாக இருந்த அண்ணணையும் விட்டு செல்ல கண்ணீர் வந்தது😢.
ஓருவழியாக அனைவரும் சமாதானம் செய்து அனுப்பி வைக்க ராகவி சக்தி வீட்டிற்கு சென்றாள். அங்கு சக்தியின் தாய் ஆரத்தி எடுத்து வரவேற்க்க அந்த நாள் அழகாக சென்றது. அஜய் மதி வந்து பார்த்து செல்ல ஓரு வாரம் அழகாக சென்றிருந்தது சக்தி ராகவிக்கு ஊடலுடனும் கூடலுடனும் 😉!