சில வருடங்களுக்கு பிறகு....
சக்தி " பாப்பா கிளம்பிட்டியா டி " என்று பேசி கொண்டே அறைக்குள் வர அங்கு அவன் அன்பு மகளோ அவனை முறைத்து கொண்டு நின்றாள்.
சக்தி வழக்கம் போல் தன் மகளின் செய்கையில் சிரித்து கொண்டு தூக்கி கொண்டான். சக்தி " என்னடா கயல் " என்று அவன் மகளை கேட்க சின்னவளோ இன்னும் அவனை முறைத்து கொண்டிருந்தாள்.
கயல் " அப்பா நான் தானா பாப்பா நீ என் அம்மாவை பாப்பானு சொல்ற " என்று குழந்தைக்கே உண்டான கோவத்தில் கேட்க ராகவி இருவரையும் பார்த்து சிரித்து கொண்டே தன் செல்ல மகனை கிளம்பினாள்.
சக்தி " கயல் செல்லம் நீங்க என்னோட குட்டி பாப்பா தான் டா ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்து பழகுனது உன் அம்மா தானா டா. எப்போ இருந்தாலும் என்னோட முதல் பாப்பா உன் அம்மா தான் டா குட்டிமா " என்று சக்தி தன் காதலை அவளிடம் சொல்ல என்றும் போல் இன்றும் தன்னவனின் காதலில் மயங்கி தான் போனாள் பாவையவள்.
ராகவி " ஹான் போதும் போதும் உங்க அப்பா பொண்ணு பாசம் எல்லாம் நானும் என் பையனும் கிளம்பிட்டோம் " என்று சொல்ல அவர்களின் செல்ல புதல்வன் பேசினான்.
சர்வா " அம்மா அபி பாப்பாவும் வருவாளா மா " என்று அழகாக கண்களை விரித்து கேட்க அவன் அழகில் தன்னையே மறந்து போனாள் தாயவள். சக்தி " அடடா என் குட்டி பையனுக்கு அபி குட்டிய பாக்கணுமா " என்று கேட்க அவன் அழகாக தலை அசைத்தான்.
ராகவி " அஜய் மாமா அபி குட்டிய கூட்டிட்டு வருவாங்க டா செல்லம் " என்று மகனிடம் கூற அவன் சிரித்து கொண்டு கயலை அழைத்து கொண்டு தன் பாட்டியிடம் சென்றான். குழந்தைகள் சென்றவுடன் ராகவியை பின்னிருந்து அணைத்து கொள்ள இன்றும் தன்னவனின் ஸ்பரிசத்தில் வெக்கம் கொண்டாள்.
சக்தி " இன்னும் அப்டியே இருக்க டி பாப்பா குட்டி " என்று அவள் கன்னத்தில் முத்தமிட அவள் மெல்ல இதழ் விரித்தாள். ராகவி " அச்சோ மாமா பசங்க வந்துர போறாங்க வா போலாம் " என்று அழைக்க அவனோ " ஹா ஹா சேரி சேரி மத்தத வந்து பாத்துக்கலாம் " என்று கண்ணடித்து கூற அவனை மெல்ல அடித்து கூட்டி சென்றாள்.
இருவரும் தன் பிள்ளைகளுடன் மித்து வீட்டிற்கு செல்ல அங்கு அஜய்யும் மதியும் தன் மகள் அபிநேஹாவுடனும் மகன் தேவ் உடனும் வந்திருந்தனர். இன்று மித்து சாய் மகன் அஸ்வந்த்ன் இரண்டாவது பிறந்தநாள்.
சர்வா அபியுடனும் தேவ் கயலுடன் அஸ்வத்துடன் விளையாட அழைத்து செல்ல அதை பார்த்து அஜய் தான் கேலி பண்ணி கொண்டிருந்தான்.
அஜய் " டேய் சக்தி பாத்தியா இப்போவே உன் பையன் என் பொண்ணா கூட்டிட்டு போறான் டா " என்று சிரிக்க பதிலுக்கு சக்தியோ " ஹா ஹா உன் பையன் மட்டும் என்ன பன்றேன் " என்று சிரிக்க மதியும் ராகவியும் தலையில் அடித்து கொண்டனர்.
மித்து சாய் அவர்களுடன் பேசி சிரிக்க குழந்தைகள் அனைவரும் ஒற்றுமையாக விளையாடி கொண்டிருக்க அழகாக அதை புகைப்படம் ஆக்கினார் புகைப்பட கலைஞர்.
சக்தி " டேய் மணி ஆகுது பாரு அஸ்வந்த்த கூப்டு கேக் வெட்ட சொல்லுவோம் " என்று மித்துவிடம் கூற அவனும் தன் மகனை அழைக்க அவன் அபி கயல் சர்வா தேவ் அனைவருடன் வர அந்த நிமிடம் அழகாக இருக்க 5 குழந்தைகளும் சேர்ந்து கேக் வெட்ட பெரியவர்கள் தன் பிள்ளைகளை பார்த்து மகிழ்ந்து நிற்க 5 குழந்தைகளும் கேக்கை அனைவருக்கும் ஊட்டி விட மூன்று ஜோடிகளும் தன் பிள்ளைகளை அணைத்து கொண்டனர்.
அவர்கள் என்றும் இதே போல் வாழ வாழ்த்தி விடை பெறுவோம்.....
எப்டி இருந்துச்சுனு சொல்லுங்க. சும்மா இதுக்கு ஒரு முடிவு மாறி குடுக்க தோணுச்சு அதான் போட்டேன். இவ்ளோ நாள் இந்த கதைக்கு சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் பெரிய நன்றி.....