உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை.
ஆத...
அந்த பறந்து விரிந்திருந்த தளம் அழகாய் வசீகரிக்கும் தோற்றத்தில் அமைக்க பட்டிருந்தது அதன் கட்டமைப்பு... நாகரிகமும் தொழில் நுட்பமும் கலந்த கலவையாய் மிளிரிய அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு அடியும் செழிப்பையும் திறமையையும் பறைசாற்றியது...
மனதிற்கு இதமாய் பூசப்பட்டிருந்த வெளிர் நீல நிற சாயம் தரையில் பதித்திருந்த இளம் சாம்பல் நிற ஓடுகளுடன் போட்டி போட்டு அழகாய் மின்னியது. தளத்தின் மேற்கூரைகள் அலங்கார விளக்குகள் பளிச்சிடும் ஆதவனுக்குப் போட்டியாக வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தது...
குளுமை அள்ளித்தரும் விதமாக ஆங்காங்கே பொறுத்த பட்டிருந்த செடிகள் அந்த இடத்தை மேலும் அழகாய் காட்டியது... விசாலமான மேசைகள், சௌகரியமான நாற்காலிகள் என்று வேலை பார்ப்பவர்களின் மனதை அறிந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு பொருளும் அழகே...
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அந்த தளத்தில் ஒவ்வொரு ப்ராஜெக்ட் அணிக்கும் ஒவ்வொரு அறை ஒதுக்கப்பட்டிருக்கும் அதில் வழக்கத்தை போலவே இந்த முறையும் கௌதமும் ஆதியும் ஒரே ப்ரொஜெக்ட்டில் தான் இருந்தனர்... இதற்கு காரணம் அவர்கள் இருவரின் அசாத்திய திறமையே...
"ஆதி இந்த பைலை கடைசியா ஒரு தடவை செக் பண்ணுடா கொஞ்ச நேரத்துல சப்மிட் பண்ணனும்... மேனேஜர் வாலு வாலுன்னு காத்திடு சுத்துறான்" தலை எல்லாம் கலைந்த படி சோர்வாய் ஆதியின் அருகில் அமர்ந்தான் கெளதம்...
"மச்சான் 22 கில் போட்டுட்டேன் இன்னும் 7 போட்டுட்டா உன்னோட ரெகார்ட்-அ பீட் பண்ணிடுவேன் கொஞ்ச நேரம் கம்முனு இரு"