க்ளாஸியோ, தி எர்த் ப்யூர் பார்ம் ஹோட்டல்ஸ் - மாலை 4.30 மணி. அரண்மனை போன்ற அமைப்பில் நாற்பது ஏக்கர் பரப்பளவில் பதினைந்து மாடிகளும் 650 அறைகள் கொண்ட அந்த மாளிகையை விளக்குகளாலும், அந்திக்காலைப் பொழுதில் ஆதித்தியனின் சுட்டெரிக்காத பொன் கதிர்களும் பிரகாசத்தை வழங்கும் வண்ணம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.சுற்றி சுமார் ஐந்து கிலோமீட்டர் பரப்பளவில் எந்த சிறு கட்டிடம் கூட இல்லாத வகையில் மொத்தமும் அந்த தங்கும் விடுதிக்குச் சொந்தமானதாக இருந்தது. சென்னை மாநகரின் முக்கியமான முன்னணி நிறுவனங்கள் பல தங்கள் தொழிற்சந்திப்புகளை அவ்விடம் தான் வைப்பர். அந்த விடுதியில் தான் இன்று உதய் மாதவனின் தந்தை பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
பொதுவாகப் பிறந்தநாள் கொண்டாடுவது ரகுநந்தனுக்கு பிரியமில்லாத ஒன்று ஆனால் தொழில் பழக்கத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் புதிதாகச் செயல்திட்ட பணிகளைப் பெறவும் இது போன்ற கொண்டாட்டங்கள் அவசியமாகிவிட மார்க்கம் வேறு இல்லாமல் இன்முகமாய் ஏற்றுக்கொண்டார்.
தமிழக முதலமைச்சரிலிருந்து உலகின் முன்னணி தொழிலதிபர்கள் எல்லாம் பங்கேற்கப்போகும் இந்த விழாவிற்குப் பாதுகாப்பு மட்டுமே அத்தியாவசியமாக இருக்க மொத்த விடுதியையும் ஆய்வு செய்து இப்பொழுது நுழைவாயிலில் ரிபில்லிருந்து, கேர்பின், க்ரேனேட் லான்ச்சர், சூசட் வரை ரக ரகமாகக் கையில் துப்பாக்கியுடன் நின்ற பாதுகாப்புப் படை வீரர்களைப் பார்த்தே அச்சம் எழுவது உறுதி.
வெண்மை ரோல்ஸ் ராய்ஸ் வளாகத்தினுள்ளே நுழைந்த பொழுதே அவனுக்கான வழியைவிட்டு காவலர்கள் நின்றிட, வாகனத்திலிருந்து இறங்கிய உதய் மாதவனின் வேகத்திற்கு ஜெயனும் பின்னாலே ஓடினான்.
"ப்ரிப்பரேஷன்ஸ் ஒன்ஸ் செக் பண்ணிட்டிங்க தானே?"
"எவ்ரிதிங் இஸ் பேர்பக்ட்லி சார்டட் சார். நீங்க ஒருதடவை பாத்துட்டு கான்பர்ம் பண்ணிட்டிங்கனா பெட்டெர்-னு எனக்கு தோணுச்சு" என்றான் ஜெயன் தன் கையிலிருந்த டாக்குமெண்ட் ஒன்றை தனக்கு பின்னாளிருந்த தன்னுடைய அசிஸ்டென்ட் கையில் கொடுத்தவாறே.
BẠN ĐANG ĐỌC
இணையா துருவங்கள் (Completed)
Lãng mạnஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...