அத்தியாயம் - 16

1.3K 44 111
                                    

ஒவ்வொரு பாரா பராக்கு கமெண்ட் இருக்கனும் சொல்லிட்டேன்... தட்'ஸ் ஆர்டர்.... 😁🤭

காலையிலிருந்து சிடு சிடுத்த முகத்துடன் வலம் வந்தவனை துளியும் அங்கிருந்தவர்களுக்கு புடிக்க வில்லை... கண்டிப்பை மட்டுமே தனது தொழிலாளர்களுக்கு தருபவன் இன்று அனைத்தையும் மீறி கோவத்தை, எரிச்சலை தத்தெடுத்திருந்தான்... காலையில் பேசிய வார்த்தைகள் எல்லை மீறி கடந்ததை அறிந்தே பேசினாலும் மனதில் பலமாக அடி வாங்கி இருந்தான் அதனை வெளிப்படுத்த இயலாமல் தனது மொத்த இயலாமையையும் கோவமாய் வெளிப்படுத்தினான்...

ஆறாவது முறையாக ஒரே பைலை எடுத்து வந்த யாழினியை பார்த்து முகம் சுளித்தவன், "அத இங்க வச்சிட்டு போங்க" 

"இல்ல சார் இத இப்ப ஆர் & டி டிபார்ட்மெண்ட்க்கு மெயில் பண்ணனும்" 

"சரி வாங்க" என்றான் அடக்கிய கோபத்துடன்...

அந்த பைலை கையில் வாங்கியவன் அதை திறக்கும் முன் ஜெயனை அழைத்தான்... இறுகிய முகத்துடன் வந்தவனிடம், "நீரஜ் ஓட ரிசார்ட் பத்தி விசாரிக்க சொன்னேனே என்ன ஆச்சு?"

"சார் ரெண்டு நாள் முன்னாடி தான் சார் நாம்ம கார்ட்ஸ் மூணு பேர அனுப்பி வச்சேன் இன்னும் சந்தேக படுற மாதிரி எதுவும் நடக்கல அங்க" 

"ம்ம்ம் இன்னும் ஒரு மாசம் கழிச்சு அனுப்பி வச்சிருக்கலாம்ல ஜெயன்?"

 கோவத்தை அடக்கி பொறுமையாய் கேட்டான் ஆனால் அதிலிருந்த அர்த்தத்தை அறிந்த ஜெயனுக்கு உடல் நடுங்கியது... 

"சார்ர்ர்..." என்று எழுந்தவனை இடை மறித்து, "பத்து பில்லியன் யூ.எஸ் டாலர் ப்ராஜெக்ட் அது கொஞ்சமாவது அத நியாபகம் வச்சு செய்யணும். இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துல எனக்கு நியூஸ் வரலைனா உங்க இடத்துல வேற ஒருத்தர வைக்க வேண்டி வரும்"

"அந்த பைலை அவனுக்கு அனுப்பாம இருந்தா இன்னேரம் இந்த 24 மணி நேரமே தேவை இல்ல" மனதில் நினைத்ததை சத்தமாய் கூறிவிட்டாள் யாழினி...

இணையா துருவங்கள் (Completed)Donde viven las historias. Descúbrelo ahora