இன்முகமாய் துரு துருவென்று வேலையைத் தானே ஓடி ஓடிச் செய்துகொண்டிருந்த உதயின் முகத்திலிருந்த வற்றாத சிரிப்பைக் கண்கள் இடுக்க அவனைக் கடக்கும் பொழுதெல்லாம் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள் யாழினி.மாலை மூன்று மணி வரை அவன் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பார்த்துக்கொண்டே இருந்தவளுக்கு, தான் செய்த ஒரு முக்கியமான தவற்றைக் கூட கண்டுகொள்ளாமல் அமைதியாக, "நெறையா மிஸ்ட்கேஸ் இருக்கு. சரி நானே பாத்துக்குறேன் நீங்க போங்க" அவளைத் துரத்த முயன்ற பொழுது யாழினிக்கு இருந்த அத்தனை பொறுமையும் காற்றில் பறந்தது.
"நேத்து தான சார் டீல் பேசுனோம் போங்க வாங்க இல்ல போ வா-னு இப்ப மறுபடியும் அங்கையே வந்து நிக்கிறிங்க?" அவன் மரியாதையான பேச்சு ஏதோ தன்னை அவனிடமிருந்து தன்னை பல மைல் தள்ளி நிறுத்துவது போன்று இருந்தது.
ஒரு கரத்தை காகிதங்கள் அடங்கிய பைலில் இருந்து கண்களை அகற்றியவன் தன்னையே சந்தேகமாய் பார்த்து யாழினியின் விழிகளை ஆராய்ந்து அவளைச் சீண்டும் பொருட்டு, "டீலா?" என்றான் எதுவும் தெரியாதது போல்.
யாழினி தலையை மேலும் கீழும் ஆட்டினாள், "நாமளா?" என்றான் மீண்டும்.
முகத்தை உர்ரென்று வைத்து மீண்டும் மேலும் கீழும் தலையை ஆட்டி, "ஆமா சார் வேற ஒருத்தன்கிட்ட பேசுன டீல உங்ககிட்ட எதுக்கு நான் சொல்ல போறேன்?"
தன் முன் அமர்த்திருப்பவன் தன்னுடைய முதலாளி என்கின்ற எண்ணம் நேற்றே முக்கால்வாசி மறைந்திருந்தது யாழினிக்கு. அது உதயின் செயல்களாலா இல்லை அவனிடம் சரண் புகுந்திருக்கும் தன்னுடைய இதயத்தின் செயலா என்ற சந்தேகத்திற்குப் பதில் அவளுக்கே தெரியாமல் போனது. தன் முன் நிற்பவன் தன் சிறு இதயத்தில் மெல்ல மெல்ல தன் தடத்தை அழுத்தப் பதிக்கும் ஒருவனாக மட்டுமே தெரிந்தான்.
"நான் அப்டி எதுவும் சொன்ன மாதிரி ஞாபகம் இல்லையே" தோளைக் குலுக்கி அனைத்தையும் மறந்தவனைப் பார்க்க கோவம் மட்டுமே வந்தது, "போடா லூசு" என்று கூட திட்ட நா துடித்தது.
BINABASA MO ANG
இணையா துருவங்கள் (Completed)
Romanceஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...