மார்ச் 2009
"என்னடா வீரமானவனே... அவ்ளோ தானா உன் வீரம்? ஓ மறந்துட்டேன் பாரு... உனக்கு புட்பால் தான வரும் கிரிக்கெட் எல்லாம் வராதுல" அமைதியாக நின்ற ஆதியை பார்த்து நக்கலடித்தான் சிவா... வேறு பள்ளியை சேர்ந்தவன்
முன்னர் ஆதி புரட்டியெடுத்த கூட்டம் தான் சிவா மற்றும் அவன் நண்பர்கள். இப்பொழுது தங்களுடைய பள்ளியில் தங்கள் நண்பர்கள் மத்தியில் அவனை எப்படியேனும் அசிங்கப்படுத்தி துவைத்தெடுக்க வேண்டும் என்ற முடிவோடு வம்பிற்கு இழுத்தனர்.
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ஒன்றிற்கு வேறு பள்ளிக்கு சென்றிருந்த நண்பர்கள் கூட்டம் வழக்கம் போல் தீவிரமான பயிற்சியில் இருந்த நேரம், அந்த பள்ளியின் தாளாளருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக போட்டி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வந்த பொழுது தங்களது உடமைகளை எடுத்து கிளம்பிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மழை வேறு வெளுத்து வாங்க துவங்கியது. வளாகத்தை விட்டு கிளம்பிய நண்பர்களை வேண்டும் என்றே வம்பை வளர்க்க பேச்சையும் வளர்த்தனர்.
"என்ன டா சண்டைக்கு இழுக்குறியா?" ஆதவன் முந்திக்கொண்டு போக அவனை பிடித்து நிறுத்தினான் உதய்.
"சண்டைக்கு இப்ப யார் வந்தா? ஒரே ஒரு மேட்ச் ஆடுங்க அப்ப ஒதுக்குறேன் நீங்க வீரமான ஆம்பளைங்க-னு" - பரமன், சிவனின் நண்பன் பொறுமையாக சீண்டினான் அவர்களின் ஆண் கர்வத்தை.
"ஏன் மேட்ச் ஆடி தான் நாங்க வீரம்-னு நிரூபிக்கணுமா... பின்னாடி இருக்குற கிரௌண்ட்-கு வாங்க டா ஒத்தைக்கு ஒத்தை நின்னு பாத்துடலாம். அப்ப தெரியும்ல எவன் வீரமானவன்-னு" பல்லை கடித்து கொண்டு எந்த நேரத்திற்கும் சண்டைக்கு நான் தயார் என்ற நிலையில் நின்றான் தமிழ்.
"தமிழ் வேணாம்"
நண்பனை தடுத்த உதய், தங்களுக்கு முன் இருந்த பத்து மாணவர்களை பார்த்து, "தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க. இந்த தைரியம் உன் ஸ்கூல்-கு வெளிய இருக்குறப்பையும் வரணும்"
YOU ARE READING
இணையா துருவங்கள் (Completed)
Romanceஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...