ராக்கெட் வேகத்தில் ஓடிய நாட்களில் அந்த வார வெள்ளிக்கிழமையும் வந்தது விரைவாக. இரவு முழுதும் தான் எடுத்துவைக்கும் அடுத்த கட்ட முயற்சியை தடை செய்வது யாராக இருக்கும் என்று ஆராய்தவனின் முயற்சிக்கு விடை எனோ கிடைத்த பாடு இல்லை. என்ன செய்தால் அந்த கருப்பு ஆடை கண்டு புடிக்கலாம் என்று எண்ணியவனின் நினைவுகளில் வந்து நின்றது ஒரு முகம் மட்டுமே. கடும் கோபத்துடன் அந்த முகத்திற்கு திரை சீலை இட்டவன் வெள்ளிக்கிழமை மெக்கானிக்கல் என்ஜினீர்களுடன் இருக்கும் சந்திப்பு நினைவிற்கு வர கண்ணயர்ந்தான் ஒரு தீர்மானத்துடன்.
காலை எந்த பதட்டமும் இல்லாமல் அந்த பெரிய கானபெரென்ஸ் ரூமிற்குள் வந்தவன் தன் அணைத்து தொழிலாளர்களும் இவனுக்காக காத்திருப்பதை உணர்ந்து தனக்கே உண்டான திமிருடன் தலைநிமிர்ந்து தன் இருக்கையில் கால் மேல் கால் போட்டு ராஜாவை போல் அமர்த்தவனை சிலர் பொறாமையுடன் பார்க்க தான் செய்தனர்.
அவன் அருகே வந்து நின்ற யாழினி அவன் எடுத்து வர கூறிய அணைத்து பைலையும் அவனுக்கு முன்னே கொடுக்க அதை சட்டை செய்யாமல் அவன் மேனேஜரிடம் அவர் பேச்சை நீடிக்க கூறி கூட்டத்தையே நொடி வீணாக்காமல் உற்று நோக்கினான் ஒரு மணி நேரமாக.
தன் மேல் மேலாளரின் பார்வை தொடர்ந்து விழுந்ததை அறிந்தவன் அதை சற்றும் போற்றுட்படுத்தாமல் தன் வேளையில் மும்முரமாக இருந்தான். ஒரு தெளிவு பிறந்தவுடன், "மீட்டிங் முடிஞ்சது எல்லாரும் போகலாம்னு சொல்லிருங்க வெற்றி" என்று அவனுடைய அறையை நோக்கி நடந்தான்.
அவன் செய்வது எதுவும் புரியாமல் அவன் பின்னே ஓடியவள் , "சார், மீட்டிங்னு சொல்லிட்டு நீங்க ஒன்னுமே பேசாம வந்துட்டீங்க" கேட்டாள் யாழினி.
"அதுதா மேனேஜர் பேசுனார்ல"
'லூசா இருக்கான் இவன்'
"இந்த பைலை போய் மேனேஜர் கிட்ட குடுங்க அப்டியே ஜெயன உள்ள வர சொல்லிட்டு போங்க"
ESTÁS LEYENDO
இணையா துருவங்கள் (Completed)
Romanceஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...