"ண்ணே பயமா இருக்கு..." பட படத்த இதயத்தோடு மீண்டும் ஒரு முறை அந்த விலையுயர்ந்த வாகனத்தையும், உள்ளே உல்லாசமாய் உலாவிக்கொண்டிருந்த ஹரி, விஷ்ணு இருவரின் முகத்தை பீதியோடு பார்த்தான் அவன். இயற்பெயர் வணங்காமுடி பாண்டியன்.ஆனால் அவன் வசனங்களை சிறிதும் சட்டை செய்யாமல் ஹரி, விஷ்ணுவின் கருப்பு நிற மெர்சிடஸ் பென்ஸ் சி-கிளாஸ் ஹூட் மீது ஷூ காலுடன் அமர்ந்து மும்முரமாக கைபேசியில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தான்.
"ண்ணே உன்ன தான்... கேக்குதா?" ஆதியின் தொடையை சுரண்டி கேட்டான் அந்த இளைஞன்.
"பயமா இருந்த சொவத்துல முட்டு டா நாயே... ஐயோ அய்யய்யய்யோ..." ஆத்திரமாக எழுந்தவன் அந்த இளைஞனை மண்டையிலே வலி தாங்க முடியாத அளவிற்கு நான்கு அடியை வைத்தான்.
"சும்மா இருக்க மாட்ட? ஆஹ்? முக்கியமான மேட்ச் போட போறேன்னு சொல்லிட்டு தானடா போனேன்" என்ன தான் இந்த ஆண்களுக்கு இந்த விளையாட்டின் மீது அப்படியொரு மோகம் என்று தெரியவில்லை.
சஹானா கூற இரண்டொரு முறை கேட்டாலும், "அது ஒரு போதை டா" என்று ரசனையாய் கூறுபவனை சிரிப்போடு கடந்துவிடுவாள் சகோதரி.
முகத்தை சுருக்கி வலியை கட்டுப்படுத்தியவன், "போ நான் போறேன். நீ என்ன ரொம்ப தான் திட்டுற" வாசலை நோக்கி வேகமாய் நகர்த்தவனை எட்டி கையை பிடித்து, "டேய் மயிறு பாண்டியா... நில்லுடா"
விருட்டென திரும்பியவன், "ண்ணா... என் பேர் கமல்காந்த்" ஆம் அவன் தனக்கு தானெ வைத்த புனைப் பெயர் கமல்காந்த்.
திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் மிகுந்தவன் சிறு சிறு திரைப்படங்களில் ஒரு நொடி இரண்டு நொடி வந்த தடயமே தெரியாமல் மறைந்துவிடுவான். எப்படியேனும் உயர்ந்த நிலைக்கு வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் தான் கமல், ரஜினிகாந்த் பெயரை இணைத்து கமல்காந்த் என்று வைத்துக்கொண்டான்.
"சரிடா காந்தம்... கோவிச்சுக்காத ஏதோ ஒரு கோவத்துல கொட்டிட்டேன். இதுக்குலாமா கோவிச்சுப்பாங்க... வாடா வாடா" கமல்காந்த்தின் தோளில் கை போட்டு சமாதானப்படுத்தினான் ஆதி.
أنت تقرأ
இணையா துருவங்கள் (Completed)
عاطفيةஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...