"என்னடா இந்த ப்ராஜெக்ட் இன்னும் சைன் ஆகாம இருக்கு?" தன்னிடம் கொடுத்த பைலை பார்த்துக்கொண்டிருந்த ஹரி விஷ்ணுவிடம் வினவ அவனோ மும்முரமாக கைபேசியை விளையாடிக் கொண்டிருந்தான், "டேய் கொஞ்ச நேரம் கம்முனு இருடா" என்று மீண்டும் விளையாட சென்றவனின் கைபேசியை வாங்கி ஓரமாக வைத்தான் ஹரி.
கோவத்தில், "எரும மாடே குடுடா அத" விஷ்ணு கேட்க, "அத விடு இத மொத பாரு" என்று அவன் பார்த்து கொண்டிருந்த பைலை விஷ்ணுவிடம் திணிக்க அதை பார்த்தவனின் நெற்றி சுருக்கத்தில் அவனுக்கும் அது புரிய வில்லை என்பது தெரிந்தது.
அது ஒரு மிக பெரிய ப்ராஜெக்ட். ஜவுளி துறையில் வெற்றியடைய உதய் இத்தனை நாட்களாக காத்து கொண்டிருந்த திட்டம். வாகனங்களின் உதிரி பாகங்களை தயாரிப்பதில் முதல் இடத்தில் இருக்கும் அவனது கம்பெனியை ஒவ்வொரு துறையாக மேம்படுத்தி கொண்டிருந்தான் உதய். அதில் சற்று பின் தங்கி இருப்பது ஜவுளி துறை மட்டுமே. அதற்காக அவன் கடந்த ஒரு வருடமாக உழைக்கும் ப்ராஜெக்ட் தான் இது. மேலை நாடுகளுக்கு ஜவுளி எற்றுமதி செய்யும் திட்டம். இதை அவன் கை பற்றுவதற்கு தடையாகவே நடக்கும் சதி திட்டம் இது.
"இது கெடச்சிரும்னு ரொம்ப நம்புனாண்டா அண்ணே. அதுக்காக நாம எம்ப்லாயீஸ்கு பார்ட்டிலாம் வச்சானேடா. இன்னும் இந்த டீல்ல சைன் பண்ணாமையா இருக்கு?"
விஷ்ணு ஆச்சிரியமாக கேட்க, "அது தான்டா எனக்கும் ஆச்சிரியமா இருக்கு. எதையும் இப்டி லேட் ஆகுறவன் இல்லையே அண்ணா. வா ஜெயன்ட்ட கேப்போம்" என்று வெளியே சென்றவர்களை இடை மறித்தது ஒரு குரல்.
"மாப்பிள்ளை?" அமர்த்தலாக வந்தது அந்த குரல்.
மாப்பிள்ளை என்னும் அழைப்பிலேயே பாதி யூகித்த விஷ்ணு முக மலர்ச்சியோடு குரல் வந்த திசை நோக்க அங்க நின்றார் ஈஸ்வரன். விஷ்ணுவின் பாசத்திற்குரிய தாய் மாமன். காயத்திரியின்(உதய், விஷ்ணுவின் தாய்) உடன் பிறந்த சகோதரர். தங்கையின் குணத்திற்கு எதிர் மாறாக பிறந்தவர்.
STAI LEGGENDO
இணையா துருவங்கள் (Completed)
Storie d'amoreஉதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆத...