"வாம்மா.....வந்துட்டியா ..என்ன காப்பாத்துடா... நான் இங்க ரொம்ப கஷ்டப் படறேன்." என மெல்லிய குரல் ஒன்று அவள் செவியைத் தீண்ட ஓடிக் கொண்டு இருந்தவள் நின்றாள்.
மீண்டும் அதே குரல்.. "வா .......வா..... வந்து காப்பாத்து..." என திரும்ப திரும்ப ஒலித்தது அக் குரல்."யாரது ? ஏன் காப்பாத்த சொல்லி கூப்பிடுது? " என அவள் சிந்தனை செல்ல ,
"ஏய் உனக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாது? என்ன வந்து காப்பாத்து.." என விகாரமாக கேட்டது மேலும் ஒரு குரல்.
முன்பு வந்து ஒரு பெண்ணின் குரல் என்பதை அறிந்த நிலா சற்று முன் வந்த குரலில் அதிர்ந்து விழித்தாள்.
இந்த குரல் ஆணுடையதா பெண்ணுடையதா என அவளால் அனுமானிக்க முடியவில்லை..*************
அதனை கண்டு தன் நடையை நிறுத்தியவள் சுற்றி பார்க்க கொடூரமான முகத்துடன் தலையில் இருந்து இரத்தம் முகத்தில் வடிய ,கண்கள் இரண்டும் சிவப்பாக,
வாய் திறந்து இருக்க அதன் வழியே
வேட்டை பற்கள் வெளியே நீட்டிய படி இருக்க ஒரு உருவம் அவளை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
அவ் உருவத்தை கண்டவள் சகலமும் மறந்து உறைந்து நிற்க
" என்னை .... என்னை..... காப்பாத்து நிலா.... ஏன் தயங்குற?" என கூறியவாறு அவளின் கையை பற்ற.....****************
"உன்னுடைய தோழி இப்போது தான் பிரச்சினையின் ஆரம்ப புள்ளியில் இருக்கிறாள். அவளுக்கு ஆபத்துக்கள் நிகழக் கூடும்.அவளுடனேயே இருந்து அவளுக்கு உதவு" என்று கூறி நில்லாமல் சென்று விட்டார்.***************
YOU ARE READING
யார் குரல் இது?
Horrorநிலா ஸ்ரீ..... நமது கதையின் நாயகி. அவளது கனவில் தன்னை காப்பாற்றுமாறு கேட்கும் குரலினை தேடிச் செல்லும் கதை... அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்களும்... பாதிப்புகளும்... அவளை காக்க போராடும் நாயகன்.... மற்றும் நிலாவின் தொழர்கள்....