அன்று முழுவதும் உணவு உறக்கம் இன்றியே கழிந்தது அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு..
மதுமதிக்கு நிலாவுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டார்... நிலாவுடன் அவர் இருக்க வேண்டுமென்றால் வேறு ஒருவரின் உடலில் நுழைய வேண்டிய கட்டாயம் ...
ஆனால் அவருக்கு வேறு ஒருவரை கஷ்டப்படுத்த துளியளவும் விருப்பமில்லை.. அவர் விரும்பியோ விரும்பாமலோ அவரது உயிர் இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்று விட்டது..உலகுக்கு வந்த காலை எல்லை நிறைவடைந்த பின் அவருக்கு இங்கே என்ன வேலை?.
அந்தக் கயவனைக் கொன்று விட்டால் இந்த உலகிலிருந்து சென்று விடலாம்...கேஷவ் எந்தவித குற்றவுணர்வும் இன்றி சுற்றிக் கொண்டு இருந்தான்.. தாமரை வீட்டிற்கு சென்று அவரது அறையில் அடைந்து கொண்டார்.. தேன் மொழியிடம் அவளது அன்புத் தந்தை கேஷவ் பற்றிய உண்மையை கூற வேண்டுமென நினைத்தாலும் இப்போது அவள் இருக்கும் மனநிலையில் சொல்வது சரியில்லை என்று பேசாமல் விட்டு விட்டார்..
நிலாவை கொலை செய்ய சொல்லி விட்டு அன்று வெளியில் சென்று வந்தான் கேசவ்... கையில் போதை பொருட்கள் சிலவற்றையும் வைத்திருந்தான்... அவன் அதை கை மாற்ற வேண்டும் இன்னும் இரண்டு நாட்களில்.. அதுவரை பண்ணை வீட்டில் வைக்கலாம் என்று முடிவு செய்து அங்கேயே சென்றான்.. இங்கு நிலாவை கொள்வதற்கு இரண்டு பேர் அவள் வீட்டை விட்டு எப்போது வெளியே வருவாள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்..
அன்று இரவு எட்டு மணி போல் அனைவரிடமும் சொல்லிவிட்டு மதுமதியான நிலா வெளியே சென்றாள் கேசவனை கொலை செய்ய எண்ணி....
யாருக்கும் தெரியாமல் சித்தார்த்தின் வீட்டில் அருகே பதுங்கியிருந்த இருவரும் நிலாவை பின் தொடர்ந்தனர்.. யாரும் தன்னுடன் வர வேண்டாம் என்று மதுமதி கூறிய போதும் எதற்கும் இருக்கட்டும் என்று சிரித்தார்த்,கதிர், ஆரவ் மூன்று பேரும் அவருக்குத் தெரியாமல் சற்று நேரம் கழித்து அவர் பின்னே அவர் பாதுகாப்புக்காக செல்வது என்று முடிவெடுத்தனர்...
YOU ARE READING
யார் குரல் இது?
Horrorநிலா ஸ்ரீ..... நமது கதையின் நாயகி. அவளது கனவில் தன்னை காப்பாற்றுமாறு கேட்கும் குரலினை தேடிச் செல்லும் கதை... அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்களும்... பாதிப்புகளும்... அவளை காக்க போராடும் நாயகன்.... மற்றும் நிலாவின் தொழர்கள்....