அத்தியாயம் 👽24

155 7 2
                                    

"அப்பா .." என்று நிலா அவரை உளுக்கிய பின்னரே சுயநினைவு வந்தவர்
"என்ன சொன்ன சித்தார்த்? என்னோட மதும்மாவா?
அவளுக்கு என்ன பிரச்சினை? அவளோட ஆத்மா சாந்தியடைய இல்லையா இன்னும்?"
என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டார் கண்ணன்... அவரால் சித்தார்த் கூறியதை இன்னும் நம்பவே முடியவில்லை ..

எதற்காக மதுமதி நிலாவிடம் உதவி கேட்க வேண்டும்... என்பதே அவர் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.. திரும்பி தன் அருகில் இருந்த தனது மகள் நிலாவிடம் "நிலாம்மா என்னடா இது சித்தார்த் சொல்றது எல்லாம் உண்மையா?" என்று கண்களில் அப்பட்டமான வலியுடன் கேட்டார் அவர் நிலாவை பார்த்து...

அவரது கேள்வியில் தலையை ஆம் என்பது போல் ஆட்டி வைத்தாள் நிலா..
நிலா தன்னிடம் இவ்வாறான விடயங்களில் ‌பொய் கூற மாட்டாள்
என்று உணர்ந்தவர் இடிந்து போய் விட்டார் .
அவரை அப்படி பார்க்க முடியாமல்
"அப்பா ப்ளீஸ்பா .. இதையெல்லாம் சரி பண்ணலாம் ..
நீங்க ஃபீல் பண்ணாதீங்க. அம்மாவை விடுவிச்சிடலாம் ..."என்று நிலா அழுது கொண்டே கூற அவளை அனைத்தவரும் நிலாவுடன் சேர்ந்து அழுதார்.

இவர்கள் இப்படி அழுவதைப் பார்த்த சம்யுவும் மனது தாங்காமல் அழத் தயாராக அதனைக் கண்டு கொண்ட கதிர் அவளது கையை பிடித்து அழுத்தி கண்களால் அவளை மிரட்ட அவளது அழுகை சுவிட்ச் போட்டது போல் நின்றது..பிறகு திரும்பிய கதிர் நிலாவையும் கண்ணனையும் பார்த்து
"சித்தப்பா என்ன இது நீங்க? சின்ன பசங்க மாதிரி அழுதுகிட்டு இருக்கீங்க ...நீங்க அழுதா பாருங்க நிலாவும் அழறா.. இப்படி நீங்க ரெண்டு பேரும் அழுதா எல்லா பிரச்சினையும் சரியாகிடுமா என்ன?"
என்று பேசப் பேச தந்தை மகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு கண்களை துடைத்துக் கொண்டனர் அவசரமாக..

கண்களைத் தொலைத்த நிலா கண்ணனைப் பார்த்து
"அப்பா அம்மாவை அந்த தீய சக்தி கிட்ட இருந்து காப்பாத்த போறேன்.. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.. அம்மாவோட ஆத்மா சாந்தி அடையனும்.. எனக்கு அதுதான் முக்கியம்.."
என்று நிலா உறுதியாகக் கூற மகள் இப்படி ரிஸ்க் எடுக்கிறாளே என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும் அவளது உறுதியைக் கண்டு வியந்தவர் கடவுள் மேல் பாரத்தை போட்டு விட்டு சரி என்பது போல தலையை ஆட்டி வைத்தார்...

யார் குரல் இது?Onde histórias criam vida. Descubra agora