அத்தியாயம் 👽 17

149 8 0
                                    

     "சித்தார்த் ....நிலாவிற்கு ஆபத்துக்கள் அதிகம்.. முடிந்தவரை அவளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் ...."
என்று கூறிய அந்த சாமியார் அங்கிருந்து செல்ல உறைந்து நின்ற நிலாவின் கை பிடித்து இழுத்து வந்தான் சித்தார்த்.. அவன் இழுத்த இழுப்பிற்கு அவனுடன் சென்றாள் நிலா .

   நிலாவை தேடி வந்த அவசரத்தில் வண்டியில் கூட வராமல் நடந்து வந்த தன் மடத்தனத்தை நொந்து கொண்டே அந்த இரவு நேரத்தில் நிலாவை இழுத்துக் கொண்டு வீதி வழியே நடந்து சென்றான் சித்தார்த்...

   வீடு வந்தது சேர்ந்தும் அவள் கையை விடாமல் அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்று சத்தம் வராமல் அறை கதவை அடைத்து  சாத்தியவன்  அப்போது தான் நிலாவின் புறம் திரும்பினான். அவன் அருகில் வருவதைக் கண்டதும் தான் அவளுக்கு சூழ்நிலை உரைத்தது. சுற்றும் முற்றும் பார்க்க அது அவனது அறை என்பதை உணர்ந்தவள் விரைந்து வெளியே செல்ல அவளது கையை பற்றி இழுத்தான் அவன்..  சித்தார்த்திற்கு இருக்கும் கோவத்தில் அவளுக்கு அடிப்பதற்கு கையை உயர்த்த கண்களை இறுக மூடிக் கொண்டு முகத்தை ஒரு பக்கம் சாய்த்து நின்றாள் நிலா... சிறிது நேரம் ஆகியும் எந்த சத்தமும் வராததால் கண்ணை திறந்து பார்க்க அவனை முறைத்தபடி கண்கள் சிவக்க, தலை கலைந்து ,வியர்த்துப் போய் ஏதோ போல நின்றிருந்தான் சித்தார்த்...

   அவனது கோபத்தை கண்டு பயந்து போனவள் 2 அடி பின் வைக்க அவளது தோள்களை இறுகப் பற்றி பிடித்தவன்
" அந்த சாமியார் அங்கே வரலைன்னா என்ன ஆகி இருக்கும்... ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சுடி.. கைல கயிறு இருக்கா இல்லையானு கூட தெரியாம  அப்படி என்ன யோசனை உனக்கு...". என்று சரமாரியாக அவளைத் திட்டித் தீர்த்தான்..

"எ...எ.. எனக்கு அது எப்போ விழுந்ததுன்னு சத்தியமா தெரியல.. ஏதோ குழந்தையோட அழுகை சத்தத்தை கேட்டு தான் வெளியே போனேன்... சாரி... ரொம்ப சாரி .."என்று குரல் உடைய அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்...

    அவள் அப்படிக் கூறும்போது அதற்கு மேல் அவன் என்ன தான் செய்ய முடியும்...
" சரி  போய் தூங்கு... காலைல பேசிக்கலாம்.."
என்று அவளை அவள் தங்கியிருக்கும் அறைக்கு அனுப்பி விட்டவன்
" எப்படித் தான்  இவளை காப்பாற்றுவது என்று தெரியலையே‌.." என வெளிப்படையாகவே கூறி கொண்டு உறங்க சென்றான்.

யார் குரல் இது?Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ