அத்தியாயம் 👽 28

142 8 0
                                    


      அந்த இடைவேளையில் யாருக்கும் தெரியாமல் ஆறு பேரும் வேறு வழியில் பங்களாவின் பின்பக்கம் வந்து சேர்ந்தனர்.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை மயான அமைதி நிலவியது..
தங்கள் கையில் கயிறு இருப்பதால் பயம் அல்லாமல் இருந்தனர்..
"கதிர் பூசாரி வந்துடுவாறு  தானே?"
என்று அந்த அமைதியை களைத்தான் ஆரவ்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாறு..."என்று கூறினான் கதிர்..

      மேலும் அரை மணி நேரம் கழித்து  ஒரு பூசாரியும் அவருடன் இரண்டு பேரும் அங்கு வந்து சேர்ந்தனர்.. அவரை வரவேற்று அந்த இடத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்தனர் அவர்கள்.. நிலாவுடன் சித்தார்த் மற்றும் கதிர் இருவரும் உள்ளே செல்ல முடிவெடுத்து இருந்தனர்... இங்கு ஆரவ் பெண்களுடன் இருப்பதாக கூறி விட்டான்.. இப்படியே பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்க அந்த இடத்தை சுற்றி காற்று வேகமாக அடிக்கத் துவங்கியது.. பெண்கள் மூவரும் பயத்தில் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்று விட்டனர்..

    பூஜை செய்யும் பூசாரி இவை எதையும் கண்டு கொள்ளாமல் பூஜை செய்வதிலேயே கவனத்தை செலுத்தினார்.. காற்றின் காரணமாக பூஜையில் மூட்டி இருந்த தீ அனையப் பார்க்க பூசாரி உடன் வந்த இருவரும் அதை அனைய விடாமல் பார்த்துக் கொண்டனர் ..

   காற்று வேகமாக வீசியதன் காரணமாக ஏற்பட்ட மரங்களின் சலசலப்புடன் ஒரு கோரமான சிரிப்பு சத்தமும் அந்த இடத்தை நிறைத்தது.. மெல்ல மெல்ல பௌர்ணமி நிலா உச்சத்தை அடைந்த நேரம் நள்ளிரவு 12 மணியளவில் நிலாவுடன் சித்தார்த் , கதிர் இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தார் பூசாரி.. திக் திக் மனதோடு இருவருடனும் உள்ளே சென்றாள் நிலா ஸ்ரீ..

   பங்களாவின் உள்ளே போய் திரும்பி வெளியே வரும் வரையும் மூவரும் பின்னால் திரும்பிப் பார்க்கக்கூடாது என எச்சரித்து அனுப்பி இருந்தார் அவர்.. மூவரும் ஒரே நேர்கோட்டில் பயணித்தனர். அப்போது திடீரென சம்யுவின் குரல் மூவரின் பின்னால் கேட்டது.
" அங்க போகாதடி ..எங்க கிட்ட வந்துடு.. எனக்கு பயமா இருக்கு நிலா.."
என்று சம்யுவின் பதட்டமான குரலில் நிலா பயந்து போய் திரும்பி பார்க்க எத்தனிக்க
"நிலா திரும்பாத...நீ  திரும்பினா நமக்குத் தான் ஆபத்து .."என்று கதிர் எச்சரிக்கை செய்தான்..

யார் குரல் இது?Donde viven las historias. Descúbrelo ahora