அத்தியாயம் 👽 9

162 9 0
                                    

     சத்தம் வந்த திசையை நோக்கி ஓடிச் சென்றனர் நால்வரும்..அங்கிருந்து யாரோ சொல்கிறார்கள் என்று நிலாவிற்கு தோன்ற உடனே தன்னுடன் ஓடிக் கொண்டிருந்த  சம்யுவின் கையைப் பற்றி நிறுத்தினாள். தனது கையை பற்றி நிறுத்திய தோழியை திரும்பிப் பார்த்தாள் சம்யு என்ன என்பதை போல் ஒரு பாவனையுடன்.

      "சம்யு யாரோ பங்களாவில் இருந்து   தான் டி  ஓடினாங்க.. அப்போ கூட பங்களாவில  ஆள் நடமாட்டம் தெரிந்தது.... அங்கு யாரோ இருக்காங்க..." என்று ஓடி வந்ததில் மூச்சிறைக்க  ஆனால் உறுதியாக கூறினாள்  நிலா.அவள் கூறிய பிறகு தான் பங்களாவின் தோற்றத்தை முழுதாக கண்ட சம்யுக்தா  முகம் வெளிற நின்று விட்டாள். ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டவள்
திரும்பி நிலாவை பார்த்து
" நிலா... நீ.... நீ கனவுல கண்டது இந்த பங்களா தானா?" என்று  கேட்க ஆம் என்று தலை அசைத்தாள் நிலா...

   அவளின் தலை அசைப்பில் மீண்டும் பங்களாவின் பக்கம் திரும்பிய சம்யுவவிற்கு இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை... பேய் படங்களில் மட்டுமே இதுவரை இவ்வாறான பழைய பாழடைந்த பங்களாக்களை கண்டவள் இன்று நேரில் காணும் போது உறைந்து நின்று விட்டாள் ...
இவள் இப்படி இருக்க நிலாவோ  இது தான் சரியான தருணம் என எண்ணியவள் பங்களாவின் உள்ளே செல்லலாம் என காலடி எடுத்து வைத்த நேரம் அவளின் காதில் அப் பெண்ணின் குரல் மீண்டும் கேட்டது‌....

  "நிலா ...நிலா... என்னை காப்பாத்த இவ்வளவு தூரம் வந்துட்ட... இன்னும் கொஞ்ச தூரம் தான் வா... வா...  வந்து என்னை காப்பாத்து..."
என மெல்லிய குரல் கேட்டது.. மெல்லிய குரல் ஆக இருப்பினும் அது  வலி நிறைந்த குரலாக இருந்தது..  அந்த குரலுக்கு எப்போதும் போல் கட்டுப்பட்டவள் மெல்ல மெல்ல நடக்கலானாள் பங்களாவை நோக்கி... மதில் சுவர்கள் இடிந்து  போய் ,பங்களாவின் முற்றத்தில் இருக்கும் மரங்கள் இலைகள் அற்ற நிலையில் வெறும் கிளைகள் மட்டுமே இருக்கும் நிலையில், பூமி வறண்டு பங்களா  வாயிற் கதவில் சிலந்தி வலைகள் என மக்கள்  இங்கே இல்லை என்பதை உறுதி செய்தது அதன் தோற்றம்...

யார் குரல் இது?Where stories live. Discover now