அன்று மாலையே இருவரும் கோயிலுக்கு சென்றனர். கோயிலின் உள்ளே காலடி வைத்த நேரம் எங்கிருந்தோ ஒரு பெரியவர் வந்து நிலாவின் முன் நிற்க பயந்த நிலா சற்று பின் வாங்கினாள்.
அப் பெரியவர் அடர்ந்த தாடி மீசை மற்றும் நீண்ட தலை முடி வைத்து பார்க்க ஒரு சித்தர் போல் இருந்தார்.அவள் பின்வாங்கியதைக் கண்டு சிரித்த அந்தப் பெரியவர் "என்ன நிலா ஸ்ரீ என்னைக் கண்டு பின் வாங்கற ...உனக்கு வேலை வந்து இருக்கு.... போ ..."என்று கூற சம்யுக்தா திகைத்து போய் நிலாவைப் பார்க்க அவளோ சிலையென நின்றாள்.
அவளை மெல்ல உலுக்கிய சம்யு "நிலா..." என அழைக்க சுயநினைவு அடைந்தவள் "உ....உங்... உங்களுக்கு என்னோட பேர் எப்படி தெரியும்? நீங்க யாரு? என்ன எனக்கு வேலையா ?
என்ன சொல்ல வரீங்க? " என அவரைப் பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்க நிலாவைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை உதித்தவர்
"உன் கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை. அதை சொல்ல எனக்கு அனுமதி இல்லை..நீயே தான் தேடிச் செல்ல வேண்டும்..." என்றார்."நான் எங்க போகணும் .என்னால முடியாது நீங்க என்னென்னமோ சொல்றீங்க..."என்று வேகமாக மறுத்துப் பேச
"நீ இன்று இந்த கோவிலுக்கு எதற்கு வந்தாய்... உனக்கு சில நாட்களாகவே வரும் கனவுகளுக்கு உன் ஆழ்மனம் விடை தேடுகிறது. நீ கனவைப் பற்றி இங்கே அறிய முடியாது. அந்த பங்களா அரசலூரில் இருக்கிறது அங்கு செல்..."
என்று கூறிவிட்டு தன் கடமை முடிந்தது என அவர் நகர அவரை வழிமறித்து சம்யுக்தா " என்ன சாமி நீங்க அவளே பயந்து போய் இருக்கா. நீங்களும் ஏதேதோ சொல்லி அவளை பயமுறுத்துறீங்க ..."என்று கேட்க.நின்று அவர்களை திரும்பிப் பார்த்தவர் "உன்னுடைய தோழி இப்போதுதான் பிரச்சினையின் ஆரம்பப்புள்ளியில் இருக்கிறாள்.
அவளுக்கு ஆபத்துக்கள் நிகழக்கூடும்.
அவளுடனேயே இருந்து அவளுக்கு உதவு" என்று கூறி நில்லாமல் சென்றுவிட்டார்.ஐயோ என்று இருந்தது சம்யுவிற்கு.
மன ஆறுதலுக்காக இங்கு வந்தால்
இவர் ஏதேதோ சொல்கிறாரே என்று நினைத்து ஒருபுறமும், கண்ணன் அப்பாவிற்கு தெரிந்தால் அவர் என்ன
செய்வார் என்று இன்னொரு புறமும் மனது யோசனை செய்து கவலை கொண்டது.
YOU ARE READING
யார் குரல் இது?
Horrorநிலா ஸ்ரீ..... நமது கதையின் நாயகி. அவளது கனவில் தன்னை காப்பாற்றுமாறு கேட்கும் குரலினை தேடிச் செல்லும் கதை... அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்களும்... பாதிப்புகளும்... அவளை காக்க போராடும் நாயகன்.... மற்றும் நிலாவின் தொழர்கள்....