அத்தியாயம் 👽 3

188 8 2
                                    


அரசலூர்.....

அழகிய கிராமம்... கிராமம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டது.படித்தவர்களும் அரசு வேலையில் உள்ளவர்களும் அதிக அளவில் இருப்பதால் எந்த குறையும் இல்லாத அழகான ஊர்.


மாலை 5 மணி போல் தன்னுடன் நிலா மற்றும் சம்யுக்தாவை அழைத்துக்கொண்டு டாக்சின் வந்து இறங்கினான் ஆரவ்.

தனது காரிலேயே வந்து இருக்கலாம். ‌ஆனால் அங்கு சுவிஸ்லாந்து செல்கிறோம் என்று கூறி விட்டு வந்ததால் தான் டாக்ஸி.

அங்கு பாதை ஓரமாக சில பெண்கள் நின்று கதைத்துக் கொண்டிருக்க இறங்கிச் சென்று " எக்ஸ்கியூஸ்மீ இங்க அதியமான் சார் வீடு எங்க இருக்கு ?" எனக் கேட்க அதில் ஒரு பெண் திரும்பி "ஹேய் சஞ்சனா உங்க வீட்டுக்கு போக தான் வழி கேட்கிறாங்க" என்றாள்.


அதில் சஞ்சனா என்றழைக்கப்பட்டத பெண் முன்வந்து "ஹாய்  அயம் சஞ்சனா. எங்க அப்பா தான் அதியமான்.நீங்க யாரு?" என்று கேட்க "ஹாய் நான் ஆரவ். நானும் என்னோட சிஸ்டர்ஸ்ஸும்  இந்த ஊரைப் பற்றியும் இங்க இருக்கிற விவசாயம் ,தொழிற்சாலைகள்  பற்றியும் எங்களோட ஆராய்ச்சிக்காக தெரிஞ்சிக்க வந்திருக்கோம். என்னோட பிரெண்ட் ஒருத்தன் தான் உங்க அப்பா கிட்ட பேசி தங்குறதுக்கு எல்லாம் ஏற்பாடு செய்தான் "

என்று நீளமாக பேசி முடிக்க அவனது பேச்சு திறமையில்  மயங்கிய சில பெண்கள் அவனை பார்த்துக் கொண்டே இருக்க,

அவனை பார்த்து முறைத்தாள் சஞ்சனா.

" என்ன சார் இப்ப உங்களுக்கு, எங்க வீட்டுக்கு போனும் அவ்வளவுதானே" என்று கோபமாகக் கூற


அவளை விசித்திரமாக பார்த்த ஆரவ் "அதைத்தானே நான் முதல்லேயே சொன்னேன்" என்று பதில் கொடுக்க ஏதோ சொல்ல வந்த சஞ்சனாவை தடுத்தது அங்கு வந்து பேசிய நிலாவின் குரல்.

யார் குரல் இது?Où les histoires vivent. Découvrez maintenant