நிலா தற்போது இரண்டு குடும்பங்களுக்கும் செல்லப் பிள்ளையாக மாறிப் போனாள். பூஜைக்கு இன்னும் ஒரே ஒரு நாளே எஞ்சியிருக்கும் நிலையில் மனதில் பயம் காணப்பட்டாலும் அது இரு குடும்பங்களின் அன்பினாலும் அந்த நேரத்தில் மறந்து போயிருந்தது என்றே கூறலாம்...
மதுமதியின் தற்போதைய நிலை பற்றி இரு குடும்பத்தாருக்கும் தெரியப்படுத்தி விட்டனர் இளையவர்கள். பிற்காலத்தில் அவர்களிடம் கூற வில்லை என்ற குறை வரக்கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை...
நிலாதான் ஒருவாறு அவர்களை சமாளித்தாள்... தான் தனது தாயை காப்பாற்றி விடுவதாக உறுதியாக கூறினாள்.. தனது மகளுக்கு இப்படியான ஒரு நிலைமை என்பதை சரளா பாட்டியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை .. நிலா கூறிய பின்னரே அமைதி அடைந்தார் அவர்.ஆனால் மனதில் நிலாவிற்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம் அவர்களிடம் இருக்கத் தான் செய்தது.. நிலா தான் ஒரு அனாதை என்பதை இனிமேல் நினைக்கவே கூடாது என்பதற்காகவே இரு குடும்பங்களும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் எனலாம்.. நிலா தங்களின் குடும்ப வாரிசு என்பதை அவள் மனதில் ஆழமாக பதிய வைத்தனர் அவர்களின் ஒவ்வொரு செயலிலும்...
அன்றே பாட்டி நிலாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்.. நிலா கண்ணன் மற்றும் மதுமதியின் மகள் என்றே ஊரில் உள்ளவர்களிடம் கூரினார்கள் குடும்பத்தினர்... ஆகவே கண்ணனையும் நிலாவையும் பார்த்து நலம் விசாரிக்க வேண்டும் என்று ஊர் மக்கள் மதியழகன் வீட்டில் வந்து குவிந்தனர் ...அதே போல தானும் நிலாவைப் பார்க்க வருவதைப் போல் சித்தார்த்தின் வீட்டிற்கு வந்தாள் தேன்மொழி.. சம்யு, சஞ்சனாவுடன் சேர்ந்து அவள் வீட்டில் இருப்பதாக கூறி விட்டாள் நிலாவிடம் ...எனவே நிலாவுக்கென்று வழங்கப்பட்ட அறையில் அமர்ந்து இருந்தாள் அவள்.
அவள் தனியே அமர்ந்திருப்பதைக் கண்டு யாரும் அறியா வண்ணம் அந்த அறைக்குள் நுழைந்தான் சித்தார்த்.
ESTÁS LEYENDO
யார் குரல் இது?
Terrorநிலா ஸ்ரீ..... நமது கதையின் நாயகி. அவளது கனவில் தன்னை காப்பாற்றுமாறு கேட்கும் குரலினை தேடிச் செல்லும் கதை... அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்களும்... பாதிப்புகளும்... அவளை காக்க போராடும் நாயகன்.... மற்றும் நிலாவின் தொழர்கள்....