இப்படியே இரவு நேர உணவின் போது தான் நிலவும் சித்தார்த்தும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்... நிலாவிற்கோ தானாகவே வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது அவனை பார்க்க...ஆனால் சித்தார்த்தோ அவளை கண்டு கொள்ளாமல் உணவு உண்பதில் கவனமாக இருந்து விட்டான்.. அதைக் கண்ட நிலாவிற்கு ஏனென்றே தெரியாமல் கண்ணாடிகள் இரண்டும் கலங்கி விட்டது...
அவனுக்கும் நடந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் இருப்பவனை பார்த்து அவள் என்னதான் நினைக்க முடியும்... அப்படி என்றால் அவன் யாரோ ஒரு பெண்ணை முத்தமிடுகிறோம் என்ற நினைப்பில் தான் தன்னையும் முத்தமிட்டானா?.. அவனுக்கு என் மேல் காதல் இல்லையா ??..என்றெல்லாம் பெண் மனம் கண்டதையும் நினைத்து குழம்பியது.. அவளது கண்கள் கலங்குவதைப் பார்த்த பாட்டி
" என்னம்மா நிலா ரொம்ப காரமா இருக்கா... கண்ணெல்லாம் கலங்கி இருக்கு?"
என்று கேட்க அவள் இல்லை என தலையாட்டவும் சித்தார்த் அவள் முன் தண்ணீர் வைக்கவும் சரியாக இருந்தது...நீரைக் குடித்து விட்டு மெல்லா உணவை உண்டு முடித்தவள் எழுந்து அறைக்கு சென்றுவிட்டாள்.. ஆனால் சித்தார்த் அவன் அறையின் பால்கனியில் இருந்து வெளியே தெரியும் பாதையை வெரித்துக் கொண்டு இருந்தான்.. அவனுக்கு ஏதோ சரியில்லை என்று அவன் மனம் உணர்த்திக் கொண்டே தான் இருந்தது ..மேலும் நிலாவை நேரில் கண்டால் அவளை ஏதாவது செய்து விடுவோம் என்பதால் அவன் அவளை நேரில் பார்ப்பதை தவிர்த்து விட்டான். அவளை கண்டு அவனது இளமை உணர்வுகள் பேயாட்டம் ஆடுகிறது.. அவனும் என்ன தான் செய்வான். அவன் தன்னை காப்பதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டான்.. இவ்வளவு காலமும் இப்படி நல்லவனாக இருந்து விட்டு சில நாட்களுக்கு முன்பே கண்ட ஒரு பெண்ணிடம் பைத்தியமானதை அவனால் நம்பவே முடியவில்லை...
இப்படி எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டு இருந்து விட்டு தூங்க வேண்டும் என்று நினைத்து தனது அறை கதவை மூட வந்தவன் கீழே பார்க்க வீட்டின் உள்ளே யாரோ நடமாடுவது போல தோன்றவும் வேகமாக அறையை விட்டு வெளியே செல்ல எத்தனிக்கும் போது அவனது கால்களுக்கு ஏதோ தட்டுப்பட்டது அவன் அறை வாயிலில் ....குனிந்து பார்த்தால் அது நேற்று எல்லோருக்கும் அந்த சாமியார் பாதுகாப்பிற்காக அளித்த கயிறு... யாருடையது என்று யோசனை செய்தவன் உடனே சென்றது நிலா சம்மு இருவரும் இரவு தங்கி இருந்த அறைக்கு தான்...கதவை தட்ட கை வைக்கும்போது அது சத்தமே இல்லாமல் மெதுவாக திறந்து கொண்டது....
YOU ARE READING
யார் குரல் இது?
Horrorநிலா ஸ்ரீ..... நமது கதையின் நாயகி. அவளது கனவில் தன்னை காப்பாற்றுமாறு கேட்கும் குரலினை தேடிச் செல்லும் கதை... அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்களும்... பாதிப்புகளும்... அவளை காக்க போராடும் நாயகன்.... மற்றும் நிலாவின் தொழர்கள்....