புகை மண்டலமாக தங்கள் முன் வந்த அவ் உருவம் மெல்ல மெல்ல விகாரமாக ஒரு மனிதனின் தோற்றம் போல காட்சி அளித்தது... இதனைக் கண்டதுமே இரு பெண்களும் பயந்து விட்டனர்... மனித உருவம் கொண்டது என்றும் கூற முடியாத அளவிற்கு அதன் உயரம் சராசரி ஏழு அல்லது எட்டு அடி இருக்கும் .... நெற்றியில் மட்டும் ஒரு கண் ....பெரிய கூரிய மூக்கு.... வாய் திறந்து சிரிக்கும்போது தென்பட்ட பெரிய பெரிய பற்கள்.... தலைமுடி மிகவும் நீளமாக வளர்ந்து இருந்தது.... அதிகளவு கருமை நிற உடல் .....என அதன் உருவம் பயத்தை தருகின்றது எனில் அது இவர்களை நோக்கி வர வர அதிக அளவு பயத்தின் காரணமாக கதிரின் கைகளிலேயே மயங்கிச் சரிந்தாள்
சம்யுக்தா.அவளை மெல்ல தாங்கிப் பிடித்த அவனுக்கும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை தான்... திரும்பி சித்தார்த்தை பார்க்க அவன் அந்த உருவத்தையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான். அந்த உருவத்தின் மொத்த கவனமும் நிலாவின் மேலேயே இருந்தது...
நிலாவும் மெல்ல மெல்ல பயத்தில் பின் நோக்கி நடந்து கொண்டு இருந்தாள். சித்தார்த் இங்கு பார்த்தாலாவது ஏதாவது செய்யலாமென கதிர் அவனை பார்க்க அவன் கவனம் இங்கே இல்லை என்பதை உணர்ந்தவன் தன் கையிலிருந்த சம்யுவின் கன்னத்தில் பலமாக தட்டினான்..
அவனின் விடாமுயற்சியில் கண் விழித்தவள் தங்கள் முன் இருந்த உருவத்தை பார்த்து வீல் என்று கத்தினாள்.. அவள் கத்தியதில் எல்லோர் பார்வையும் அவள் பக்கம் திரும்ப இது தான் தருணம் என உணர்ந்த கதிர் சித்தார்த்தை பார்த்து "சித்தார்த் நிலவை கூட்டிட்டு வா "என்று உரக்கக் கத்தியவன் தன் அருகில் இருந்த சம்யுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஓடினான்..
அவனது கூட்டில் வேகமாக திரும்பிய சித்தார்த் நிலாவை அழைத்துக் கொண்டு அவர்களின் பின்னே ஓடினான். உடனே அந்த உருவம் சட்டென ஓடிக் கொண்டு இருந்தவர்களின் முன் தோன்றியது.. என்ன செய்வது என தெரியாமல் நால்வரும் பயத்தில் எப்படி தப்பிக்கலாம் என்று சுற்றும் முற்றும் பார்க்க
" ஹா... ஹா... ஹா..." என்று தன் கோரப் பற்களை வெளியே காட்டிய படி நிலாவை நோக்கி வந்தது அவ் உருவம்.
YOU ARE READING
யார் குரல் இது?
Horrorநிலா ஸ்ரீ..... நமது கதையின் நாயகி. அவளது கனவில் தன்னை காப்பாற்றுமாறு கேட்கும் குரலினை தேடிச் செல்லும் கதை... அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்களும்... பாதிப்புகளும்... அவளை காக்க போராடும் நாயகன்.... மற்றும் நிலாவின் தொழர்கள்....