சித்தார்த் ஆரவ் உடன் வெளியே சென்றாலும் அவன் மனதில் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது..ஏதோ மனதில் சொல்ல முடியாத பயம் ....எனவே சிறிது நேரத்திலேயே வீட்டிற்கு செல்லப் போவதாக ஆரவ்விடம் கூற அவனோ பிறகு வருவதாக கூறி விட்டான் ... சித்தார்த் வீட்டிற்கு சென்றடையும் போது ஹாலில் பாட்டியுடன் தேன்மொழி மற்றும் சம்யு இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து சுற்றிச் சுற்றி வீடு முழுவதும் நிலாவை கண்களால் தேடினான்...
ஆனால் அவன் கண்களுக்கு அவள் தென்படவே இல்லை... மனதில் பயம் அப்பிக் கொண்டது அவனுக்கு... எங்கே தான் சென்றாலோ? என மனது அடித்துக் கொண்டது ..தான் ஏன் இவ்வாறு பயப் படுகிறோம் என்று கேட்டால் அதற்கான பதில் இல்லை அவனிடம்...
உடனே உள்ளே சென்று பேசிக் கொண்டு இருந்தவர்களின் அருகில் நிற்க அவனை நிமிர்ந்து பார்த்த பாட்டி
"என்னப்பா... சீக்கிரமே வந்துட்ட? ஆரவ் வரலையா உன்கூட?"
என்று கேட்க இல்லை என மட்டும் தலையசைத்தவன்
" என்ன பாட்டி நீங்க மட்டும் இருக்கீங்க.. அம்மா நிலா ஸ்ரீ யாருமே இல்லையே ?அவங்க எல்லாம் எங்கே ?"என்று இவன் மறு கேள்வி கேட்டான் அவரிடம்...அவனை குறுகுறுவென பார்த்த பாட்டி
"அம்மா சமைக்கிறா பேராண்டி.. அப்புறம் இந்த நிலா பொண்ணு வீட்டை சுத்தி பாக்க போனா ..மேல இருப்பா போல.." என்று கூற அங்கிருந்த யாரையும் பொருட்படுத்தாமல் மேலே ஏறினான் சித்தார்த்... தேன்மொழி பல விதமாக மனதில் யோசனை செய்து கொண்டு அமர்ந்து இருந்தாள்...மேலே உள்ள எல்லா அறைகளிலும் தேடியவன் ஏதோ தோன்ற அவனது அறைக்கு செல்ல அங்கு கதவு திறந்து இருந்தது... வேகமாக உள்ளே சென்றவன் கண்டது என்னவோ அவனது அறை பால்கனியில் நின்று வெளியே எதையோ ரசித்துக் கொண்டு உதட்டில் புன்னகையுடன் இருந்த நிலாவை தான் ... வெயில் சுல்லென்று முகத்தில் பட வெள்ளை நிற சுடிதார் அணிந்து விரித்து விட்ட முடி காற்றில் பறக்க நின்றிருந்தவள் அவன் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள்...அவன் மெல்ல சத்தம் வராமல் அவள் பின்னே சென்று நின்றான் மூச்சுக் காற்று படும் இடைவெளியில்...
YOU ARE READING
யார் குரல் இது?
Horrorநிலா ஸ்ரீ..... நமது கதையின் நாயகி. அவளது கனவில் தன்னை காப்பாற்றுமாறு கேட்கும் குரலினை தேடிச் செல்லும் கதை... அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்களும்... பாதிப்புகளும்... அவளை காக்க போராடும் நாயகன்.... மற்றும் நிலாவின் தொழர்கள்....