அத்தியாயம் 👽 1

279 7 0
                                    

எங்கும் இருள் சூழ்ந்த நிலையில் அந்தப் பாதை வழியே தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்தாள் நிலா  ஸ்ரீ. அவள் செல்லும் பாதை இதற்கு முன் அவள் அறியாத பாதை..
செல்லும் வழி எங்கும் ஏதேதோ சத்தங்கள்....
நாய் ஒன்று தூரத்தில் குரைக்கும் சத்தம்..
விதவிதமான பூச்சிகளின் இரைச்சல் சத்தங்கள்.....என அவளை பயத்தில் உறைய வைத்தது.

   திடீரென இருள் சூழ்ந்த அந்த இடத்தில் தூரத்தில் சிறிதாக தென்பட்டது ஒரு வெளிச்சம் புள்ளி.
அதைப் பார்த்ததும் நிலாவிற்கு மகிழ்ச்சி ஊற்றெடுக்க அந்த இடத்தை நோக்கி ஓடினாள்.

ஆனால் தூரத்தில் இருந்து பார்த்ததை விட அவள் அருகே செல்லச் செல்ல அது பெரிதாகி ஒரு அழகான பங்களாவில் இருந்து வரும் வெளிச்சமாக தென்பட்டது.

  அந்த பங்களாவைக் கண்டதும் தனக்கு ஒரு இடம் கிடைத்த மகிழ்ச்சியில் அவள் பாதையில் இருந்த சிறு கற்களையும் முற்களையும் மிதித்தவாறு ஓடினாள்.
அதன் அருகில் செல்ல அவளுக்கு ஏதோ ஒரு குரல் கேட்டது.

வாம்மா.....வந்துட்டியா ..என்ன காப்பாத்துடா... நான் இங்க ரொம்ப கஷ்டப் படறேன்." என மெல்லிய குரல் ஒன்று அவள் செவியைத் தீண்ட ஓடிக் கொண்டு இருந்தவள் நின்றாள்.
மீண்டும் அதே குரல்.. "வா .......வா..... வந்து காப்பாத்து..." என திரும்ப திரும்ப ஒலித்தது அக் குரல்.

"யாரது ? ஏன் காப்பாத்த சொல்லி கூப்பிடுது? " என அவள் சிந்தனை செல்ல ,
"ஏய் உனக்கு ஒரு வாட்டி சொன்னா புரியாது? என்ன வந்து காப்பாத்து.."  என விகாரமாக கேட்டது மேலும் ஒரு குரல்.
முன்பு வந்து ஒரு பெண்ணின் குரல் என்பதை அறிந்த நிலா சற்று முன் வந்த குரலில் அதிர்ந்து விழித்தாள்.
இந்த குரல் ஆணுடையதா பெண்ணுடையதா என அவளால் அனுமானிக்க முடியவில்லை..

நிலா பயத்தில் சுற்றும் முற்றும் பார்க்க
" ஹா ......ஹா.......ஹா......" என பயங்கரமான சிரிப்பு சத்தம்...
நிலாவிற்கு பயத்தில் வியர்க்க துவங்கியது.
சுவாசிக்க சிரமப் படுபவள் போல் மீண்டும் மீண்டும் மூச்சை இழுத்து வெளியே விட்டாள்.

யார் குரல் இது?Donde viven las historias. Descúbrelo ahora