அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டவள் ஒன்னும் இல்லை எனக்கு தூக்கம் வருது நான் தூங்கணும் என்றவள் படுக்கையில் விழ எழிலரசன் எதுவும் பேசாமல் அங்கிருந்த ஷோபாவில் சென்று அமர்ந்தான்.
*********
வந்ததும் வராதுமா இந்த வீட்டு பிள்ளைய ஹாஸ்பத்திரிக்கு அனுப்பிட்டியா.. இன்னும் என்னென்ன பண்ண போறியா... நீ இந்த வீட்டுக்குள்ள வந்த முதல் நாளே பிரச்சனைய ஆரம்பிச்சிட்டியா விளங்கிடும் என வனஜா கூறவும் இசை கண்களில் கண்ணீர் பெறுகியது..
வனஜா நீ வாய மூடிட்டு சும்மா இருக்க மாட்டியா.. இசை என்ன பண்ணாணு நீ இப்படி பேசிட்டுருக்க.. அவன் தான் சொல்றான்ல அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லைனு என்றார் விஜயா எரிச்சலுடன் ....
இசை எதுவும் பேசாமல் அவள் அறைக்கு சென்று விட்டாள்.
வனஜாவை கோபமாக முறைத்த எழிலோ வேகமாக அவனும் அறைக்கு சென்று விட்டான்.
அறைக்கு சென்ற இசை கட்டிலில் அமர அங்கு வந்த எழிலரசன் இசை அவங்க அப்படி தான் அவங்க சொல்றதலாம் மனசுல வெச்சுக்காத ப்ளீஸ் என்றான் அவளுக்கு ஆறுதலாக..
சரி என்றாள் அவளும்..
ஒரு வாரம் சென்றது..
எழிலரசன் இசைக்கு விஜயா சொன்னது போலவே ரிசப்ஷன் வைத்து கொண்டாடினர்.. பல விஐபி களும் பல பிசினஸ் மேன்களும் கலந்து கொண்டனர்...எழிலரசன் அவன் நண்பர்களை மட்டும் அழைக்க வில்லை..இசையிடம் அன்று அப்படி நடந்து கொள்ள காரணம் குடிக்க கூறி கட்டாய படுத்திய நண்பர்கள் தான் என நம்பினான் எழில்...
நாட்கள் நகர துவங்கியது..
எழிலரசன் வீட்டில் அனைவரும் இசையுடன் அன்புடன் பழகினர் வனஜாவை தவிர்த்து..
ஸ்வாதி சுருதி இருவரும் அங்கேயே தங்கி தங்கள் படிப்பை தொடர அவர்களின் பெற்றோர்கள் மட்டும் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.