இரவு நேரம் தாமதமாக எழிலரசன் இசை இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
சுருதி ஸ்வாதி ருத்ரா மூவரும் மட்டும் ஷோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தனர்.
இசை எழில் வீட்டிற்குள் செல்ல வாங்க அண்ணி என்ன செமயா என்ஜாய் பண்ணிங்களா... என்றாள் ருத்ரா புன்முறுவல் முகமாக..
ருத்ராவை பார்த்த இசை ஆமா..நீ வேற..சும்மா இரு ருத்ரா..சரி அத்தைலாம் தூங்கிட்டாங்களா..என்றாள் இசை சலிப்பு நிறைந்த குரலில்..
ஆமா அண்ணி..தூங்கிட்டாங்க..
சரி நான் ரூம்க்கு போறேன்...என்னங்க சீக்கிரம் வாங்க என கூறிவிட்டு அறைக்கு சென்று விட்டாள் இசை.
எழிலை பார்த்த ஸ்வாதி மாமா என்ன ஆச்சு இசை அக்கா ஏன் சோகமா போறாங்க என்று வினவவும் போன இடத்தில என் காலேஜ் பிரண்ட பாத்தேன் அவ கிட்ட கொஞ்சம் ஜாலியா பேசிட்டேன் அதுக்கு அவ கோச்சிக்கிட்டு போறா என்றான் எழிலரசன்..
இசை அக்காவுக்கு உங்க மேல ரொம்ப தான் போஸ்ஸசிவ்... என்றாள் சுருதி..
என்னங்க என இசை குரல் கொடுக்க...
ஆஹ் இதோ வரேன் டி... என்றவன் சரி.. நான் போறேன் இல்லைனா இதுக்கும் திட்டுவா என எழில் வாங்கிய பொருட்களை எடுத்து கொண்டு அறைக்கு சென்று விட்டான் அவன்..
நம்ம மாமா எவ்ளோ பெரிய பிசினஸ்மேன் அவருக்கு கீழே எத்தனை பேரு வேலை செய்றாங்க.. அத்தை மாமாக்குகூட மாமா பயந்தது இல்லை...ஆனா அவர் இப்போ அவர் பொண்டாட்டிக்கு இப்படி பயப்படுறாரு..என்றாள் ஸ்வாதி வியப்புடன்..
அறைக்கு சென்ற எழிலரசன் கதவை தாழிட்டு விட்டு வாங்கிய பொருட்களை டேபிள் மீது வைத்தவன் தன் முன் நின்ற தன்னவளை பார்க்க அவளோ அவன் வாங்கி தந்த இரவு உடையில் இருந்தாள்..