சுவாசம் 22

702 11 0
                                    

கண்களை துடைத்து கொண்டவள் ஒண்ணுமில்லங்க... என கூற அந்த நேரம் எழிலரசன் கைபேசி சிணுங்கியது,..

கைபேசியை எடுத்து அழைப்பை ஏற்று ஹலோ என்க

ஹலோ எழில் நான் ரம்யா...

ஆ.. சொல்லு ரம்யா.. என்ன ஆச்சு இந்த நேரத்தில போன் பண்ணிருக்க ஏதாவது ப்ரோப்லேமா என்ற  எழிலரசன் போன் பேசிக்கொண்டே பால்கனிக்கு சென்று விட்டான்..

மீண்டும் அழுதுக்கொண்டே கட்டிலில் படுத்தவள் அழுதுக்கொண்டே உறங்கி விட்டாள்..

எழில் சில நிமிடம் ஆபிஸ் விஷயத்தை பற்றி ரம்யாவிடம் பேசியவன் சிறிது நேரம் அவனது ஆபிஸ் வேலையை மடிக்கணியில் பார்த்தவன் வேலையை முடித்து விட்டு தன்னவளின் அருகில் சென்று பார்க்க இசை நித்திரையில் மூழ்கி இருந்தாள்..

அவள் அருகில் சென்று அமர்ந்தவன் தன்னவளின் நெற்றியில் இதழ் பதித்து ஏன் டி நீ இப்படி இருக்க... என்னால உன்னை புரிஞ்சிக்கவே முடியல... என் காதல நீ புரிஞ்சிக்கவே மாட்டியா...என்ன காரணத்துக்காக நீ என் கிட்டருந்து பிரிஞ்சிருக்கனு எனக்கு தெரியல.. கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற.. என்னால முடியல டி ஒவ்வொரு நாளும் நீ என்னை விட்டு விலகி போயிட்டே இருக்க.. நான் என்ன பண்ணா என்ன புரிஞ்சிக்குவ..... நீ காரணம் இல்லாம இப்படி பண்ண மாட்ட எனக்கு தெரியும்..எதுவா இருந்தாலும் மனசு விட்டு சொல்லிடு.. என்னை எதுக்கு நீ இப்படி வெறுக்குற... என்ன தான் நீ என்னை வெறுத்தாலும் என்னால உன்னை வெறுத்து ஒதுக்கிட்டு போக முடியாது... எனக்கு நீயும் நம்ம கொழந்தையும் வேணும்... நான் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் இசை என்றவன் அவளின் வயிற்றில் முத்தமிட்டவன் செல்லக்குட்டி நீ தான் வெளிய வந்து உன் அம்மாவோட மனச மாத்தணும்.. எனக்கு நம்பிக்கை இருக்கு என் இசை சீக்கிரமாவே என்ன புரிஞ்சிக்குவானு..
சீக்கிரமா வெளிய வந்துருடா செல்லம்...அப்பாவுக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு டா என்றழுதான் எழில்...

சுவாசமே நீயடி...(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora