எழில் சென்று மருத்துவரை அழைத்து வர மருத்துவர் இசையை சோதித்து பார்த்தவர் மிஸ்டர் எழில்...என அழைக்க
சொல்லுங்க டாக்டர்... என்றான் அவனும்
உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் .. என எழிலை இசையிடம் இருந்து சற்று தொலைவில் அழைத்து சென்றார் மருத்துவர்.
உங்க ஒய்ப்க்கு ஹார்ட்பீட் அன்ட் பல்ஸ் எல்லாமே நார்மலாகிடுச்சி... பட் முழுசா கியூர் ஆகல..இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லிட முடியாது...ஸ்ட்ரெஸ் ஆகாம மட்டும் பாத்துக்கோங்க..கம்ப்ளீட்டா ரெஸ்ட் வேணும் அவங்கள கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்கோங்க...எனவும்
ஓகே டாக்டர் தேங்க் யூ ...என்ற எழில் பெருமூச்சு விட்டு நின்றான்..
நாங்க எங்க கடமையை தான் செஞ்சோம்... நீங்க கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்... அத விட உங்களோட அன்பு தான் உங்க மனைவிய காப்பாத்தத்திருக்கு...ஒன் வீக்ல நீங்க அவங்கள டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க.. பட் டூடேஸ் இவங்க ஐசியூலருந்து தான் ஆகணும். டூ டேஸ்க்கு அப்புறம் நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம்..பேபிக்கும் பிரீத்திங் எல்லாம் நார்மலாகிடுச்சுனா வார்டுக்கு மாத்திரலாம்...என்ற மருத்துவரின் சொற்களில் நிம்மதியடைந்தான் எழில்.
டாக்டர் கொழந்தைய பாக்கலாமா..தயக்கமுடன் கேட்கவும்
நீங்க மட்டும் போய் கொழந்தய பாக்கலாம்...
டாக்டர் அவ கொழந்தைய பாக்கணும்னு சொல்றா..
பட் இப்போ முடியாது எழில்.. இவங்க கண்டிஷன்க்கு டூ டேஸ் இவங்க ஐசியூல தான் இருக்கணும்..நார்மலாகிட்டா நாளைக்கே வார்டுக்கு மாத்திரலாம்.. ஆனா கொழந்த ஐசியூல அலவுட் இல்லை..