என்ன பயமா.. உன்னை பாத்தா..ஏய் நீ எல்லாம் ஒரு ஆளு உன்னை பாத்து பயந்து வேற போறாங்களா.. பயப்பட வேண்டியவ நான் இல்லை.. தப்பு பண்ண நீ தான்.. நீ பண்ண இந்த ஒவ்வொரு விஷயமும் என் புருஷனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா.. ம்ம்.. எப்போ எல்லாம் முடிஞ்சிருச்சுனு நீ என் கிட்ட சொன்னதெல்லாம் பொய் னு வந்து சொன்னியோ அப்பவே எல்லாம் ஆரம்பிச்சிருச்சு... என் மனசுல பொய் னு ஒரு விதயை விதைக்க தெரிஞ்ச உன்னால அத தண்ணி ஊத்தி காப்பாத்திக்க தெரியல... எப்போ என் புருஷன் எந்த தப்பும் செய்யாதவர்னு தெரிஞ்சிதோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் நான் அவர பிரிய கூடாதுனு...என்ன தைரியத்துல நான் அவர்கிட்ட சொல்ல மாட்டேன் நினைச்சுகிட்டு இந்த ஆட்டம் போடுற... இதெல்லாத்தையும் அவர் கிட்ட சொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது... ஆனாலும் நான் சொல்லாம இருக்கேன்னா உனக்கு ஏதோ நல்ல நேரம்னு அர்த்தம்.. ஒழுங்கா எப்படி வந்தியோ அப்படியே ஓடிடு இல்லை.. அவ்ளோ தான் என்ற இசை வேகமாக அறைக்கு சென்று விட்டாள்....
ச்ச என கோபமாக கத்திய ரம்யா "இசை... உனக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சுள... இனிமேலும் உன்னை உயிரோட விட்டு வைக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லை... நீ இந்த அளவுக்கு பேசுறனா அதுக்கு காரணம் நீ எழில் மேல வெச்சுருக்க காதல் மட்டும் தான்... அந்த காதல் எனக்கு சொந்தமானது... இது என் வீடு...எனக்கு இப்போ இடைஞ்சளா இருக்கிறது நீயும் உன் வைத்துல இருக்க கொழந்தையும் தான்.. உங்கள முடிச்சிட்டா என் ரூட் களியர் என கூறியவள் அங்கிருந்து அவளுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்று விட்டாள்..
கோவிலுக்கு சென்ற சுஜாதாவும் விஜயாவும் இறைவனை வணங்கி விட்டு சிறிது நேரம் அங்கு ஒரு கல்லில் அமர்ந்தனர்..
அக்கா.. நம்ம இசைக்கு எட்டாவது மாசம் முடிஞ்சு ஒன்பதாவது மாசம் தொடங்க போகுது.. அவளுக்கு சீக்கிரமா சீமந்தம் பண்ணணும் கா.. என்றார் சுஜாதா..