அன்று இரவு வீட்டிற்கு வந்த எழிலுக்கு அமைதியாக சாப்பாடு பரிமாறினாள் இசை..
உணவை சாப்பிட்டு முடித்தவன் அங்குள்ள ஷோபாவில் அமர்ந்திருந்தான்..
கலையும் சிவாவும் இப்போ எங்க தங்கிருக்காங்க.. என்றாள் இசை அவனை நோக்கி
ஆஹ்.. அவங்கள ஒரு அப்பார்ட்மெண்ட்ல தங்க வெச்சுருக்கேன்.
அவங்க இந்த அளவுக்கு கஷ்டப்படுறாங்கனா அதுக்கு காரணம் நீங்க மட்டும் தான்..உங்க தம்பி ஆசைப்பட்ட வாழ்க்கை அவனுக்கு சந்தோசமா கிடைக்கனும்னு நீங்க நினைச்சிருந்தா வீட்ல இருக்கவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கணும்.. ஆனா நீங்க... உங்களுக்கு உங்க கல்யாணம் நிக்க கூடாது.. பொண்ணு கிடைச்சா போதும் அதானே உங்க எண்ணம்
.அதனால தான் உங்க தம்பி விரும்பற பொண்ணு, என் அக்கானு தெரிஞ்சதும் அவளை உங்க தம்பி கூட அனுப்பி வெச்சுட்டு என்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கைய அழிச்சிட்டீங்க..உங்கள மாதிரி ஒரு சுயநலம் புடிச்சவர நான் பாத்ததே இல்லை... நான் என்ன பாவம் பண்ணேனோ நீங்க எனக்கு புருஷனா கிடைச்சிருக்கீங்க என்று விடாமல் பேசிக்கொண்டு சென்றாள் இசை...அவளை முறைத்தவன் இசை போதும் எதுக்கு இப்போ இப்படிலாம் பேசுற... எனக்கு நீ ஏன் இப்படி நடந்துக்கிறனு சத்தியமா தெரியல... இசை எதையும் முழுசா தெரிஞ்சிக்காம பேசாத ப்ளீஸ் அப்புறம் நீ தான் ரொம்ப கஷ்டப்படுவ.. ஆமா நான் சுயநலம் பிடிச்சவன் தான் என் ஆசைக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..ஆனா எனக்கு வேற வழி தெரியல... என்னால உன்னை தவிர வேற யாரையும் என் வாழ்க்கைல நினச்சு கூட பாlக்க முடியாது.... நான் இதுவரைக்கும் இதை யாருகிட்டயும் சொன்னது இல்லை என் பிரண்ட் ரம்யாவை தவிர... ஆனா இன்னைக்கு நான் உன்கிட்ட சொல்றேன்.. இசை எனக்கு உன் அக்காவ கல்யாணம் பண்ணிக்கிறதுல துளியும் விருப்பம் இல்லை..ஏன்னா நான் காலேஜ்ல வேற ஒரு பொண்ண லவ் பண்ணேன்...வீட்ல வற்புறுத்துன தால தான் நான் பொண்ணு பாக்க வரதுக்கே சம்மதிச்சேன்...அதுவும் சிவா தான் சில விஷயங்களை சொல்லி என்ன சம்மதிக்க வெச்சான்...நான் பொண்ணு பாக்க வந்தபோ உன் அக்காவ பாத்து சம்மதம் சொன்னதுக்கு காரணம் சிவா.. அவன் காதலிச்ச பொண்ணு உன் அக்காவதான் பொண்ணு பாக்க போறோம்னு அவன் என் கிட்ட அன்னைக்கு தான் சொன்னான்.. கல்யாணத்துக்கு சம்மதிக்கற மாதிரி நடிக்க சொன்னான்... நானும் சமாதிச்சேன்...உன் அக்காவும் சம்மதிச்சா சிவாவோட பிளான கேட்டு.. கலை என் கூட போன்ல பேசுறது போல சிவா கிட்ட பேசுவ..சுருதிக்கும் இது தெரியும்..