சிவா கலை இருவரையும் பார்த்து நின்ற ஸ்வாதி அழுதுக்கொண்டே அறைக்கு ஓடி கதவை தாழிட்டு கொள்ள அனைவரும் அவள் பின்னே ஓடி கதவை தட்ட அவளோ சேலையால் தூக்கு போட்டு கொள்ள முயற்சி செய்தாள்.. அதற்குள் எழிலரசனும் ரவியும் கதவை உடைத்து உள்ளே சென்று அவளை தடுக்க மற்ற அனைவரும் உள்ளே சென்றனர்..
ஸ்வாதி உனக்கென்ன பைத்தியமா என்ன காரியம் பண்ண பாத்த.. என்றான் எழில் கோபமுடன் ..
நான் ஏமாந்துட்டேன்...நான் சிவா மாமாவ ரொம்பவே காதலிச்சேன் ஆனா அவர் வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாரு...நான் சாகுறேன் என்ன விடுங்க என ஸ்வாதி கதறி அழ
ஸ்வாதி அழாத டா என விஜயா அவளை அணைத்து கொண்டார்..
ஸ்வாதி... விடு மா.. அவன் இல்லைனா என்ன உனக்கு ஒரு நல்ல பையன் கிடைப்பான் விடுடா..என ஒவ்வொருவரும் அவளை சமாதானம் செய்து அங்கிருந்து ஹால் ரூமிற்கு அழைத்து சென்று ஷோபாவில் அமர வைத்து அவளுக்கு தண்ணீர் கொடுத்தனர்...
சுருதி தேவி மட்டும் அவள் அருகில் இருக்க மற்று அனைவரும் வாசலில் நின்றருக்கும் சிவாவிடம் சென்றனர்..
சுஜாதா, இப்போ சந்தோசமா டா உனக்கு...
மா..
உன் வாயால அப்படி கூப்பிடாத...பாவம் டா அந்த பொண்ணு உன்னை நம்பி கடைசியா ஏமாந்து போனது தான் மிச்சம்... எங்களுக்கு இப்படி ஒரு மகனே இல்லைனு நினைச்சுக்கிறோம்... தயவு செஞ்சு என் மூஞ்சிலயே முழிக்காத...
போய்டு... இந்த ஓடுகாளிய ஒருநாளும் என் மருமகளா ஏத்துக்கவே மாட்டேன்... என் கண்முன்னாடி நிக்காத போய்டு என கூறிய சுஜாதா கதவை இழுத்து மூடினார்..சிவாவும் கலையும் அங்கிருந்து சோகமுடன் சென்று விட்டனர்...
அறைக்கு சென்ற எழிலரசன் சிவாவிற்கு போன் செய்தான்..
எழில், டேய் எதுக்கு டா இப்படி பண்ண.. அவங்க தான் கோவமா இருக்காங்கனு தெரியும்ல அப்புறம் ஏன்டா....