ஆதவனின் வருகையில் அழகாய் விடிந்தது அன்றைய பொழுது...
ஆறு மணியளவில் எழிலுக்கு முன்னாள் எழுந்து கொள்ளும் இசை குளித்து முடித்து தயாரானவள் அவள் கணவனுக்கு தேவையான உடை முதல் ஷூ வரை தயாராக வைத்து விட்டு கீழே சென்று விடுவாள்.சமையல் அறைக்கு சென்று அனைவருக்கும் காபி போட்டு கொடுத்து விட்டு தன்னவனுக்கு காபி எடுத்து கொண்டு அறைக்கு செல்ல அவனோ ஏழு மணிக்கு எழுபவன் குளித்து முடித்து அவள் எடுத்து வைத்திருக்கும் உடையை மாற்றி கொண்டு தயாராகி இருப்பான்.
விஜயா சுஜாதா இருவரும் ஹாலில் அமந்திருக்க குணசேகரன் வெங்கடேசன் இருவரும் அமர்ந்து செய்தி தாள் படித்து கொண்டிருப்பது வழக்கம்.
இசை எழிலுக்கு காபியை கொடுத்து விட்டு கீழே செல்பவள் பூஜை வேலையை முடித்து விட்டு அன்றைய சமையலை அரக்க பறக்க தொடங்கிவிடுவாள்...தேவி வேலைக்கு செல்வதால் சுஜாதாவும் விஜயாவும் இசைக்கு சில உதவிகளை செய்யவும் எட்டு மணி அளவில் இசை சமையலை முழுவதும் முடித்து விடுவாள்.
அனைவரும் அவரவர் வேலைக்கு செல்ல தயாராகி ஹாலுக்க்கு வந்தவர்கள் டைனிங் டேபிளில் அமர இசையும் அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் ரேவதியும் அனைவருக்கும் உணவை பரிமாறுவர்.
அன்று எழிலரசன் வெள்ளை நிற காஷுவல் சட்டையும் அதற்கு மேல் கருப்பு கோட் உடுத்தியவன் அதற்கு ஏற்றது போல கருப்பு ஷூவும் அணிந்திருந்தான்.அவன் களைந்த கேசத்தை லேசாக சீவி அவன் இடது கையில் ஒரு சில்வர் வாட்ச் கட்டியிருந்தவன் அழகிய முகத்தில் கருமை நிறை மீசைக்கு கீழே லேசாக முளைத்த தாடியை லேசாக வருடி கொண்டிருந்தவன் அருகில் சென்ற இசை தன்னவனை பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு என்னங்க இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரிங்களா என அவள் கேட்கவும் அவளை புரியாமல் பார்த்தவன் சரி என கூறிவிட்டு சென்று விட்டான்.
![](https://img.wattpad.com/cover/315465045-288-k5016.jpg)