அத்தை என்ற இசை சட்டென விஜயாவை கட்டி கொண்டு அழ தொடங்கினாள்..
அத்தை......என்ன மன்னிச்சுடுங்க அத்தை...என அழுது கொண்டே அவள் கூறவும்
அவளை ஒன்றும் புரியாமல் பார்த்த விஜயா ஏன்... என்ன ஆச்சு மா.. நீ தான் எந்த தப்பும் பண்ணலையே மா..நீ ஏன் என்கிட்ட மன்னிப்பு கேக்குற..
அத்தை இவ்ளோ அன்பா இருக்க உங்க கிட்டயே நான் நிறைய விஷயத்தை மறச்சுருக்கேன்..
எனக்கு வேற வழி தெரியல.. அப்போ நான் இருந்த சூழ்நிலை அப்படி.. ஆனா உங்க எல்லார்கிட்டயும் அத மறச்சிட்டு உங்க கூடவே சிரிச்சு பேசறது எனக்கு குற்ற உணர்ச்சியா இருந்தது... ஆனா இதுக்கு மேலயும் என்னால மறைக்க முடியாது...என எழிலரசன் பெண் பார்க்க வந்தது முதல் இசை எழில் திருமணம் வரை அனைத்தையும் கூறி முடித்தாள்...இசை நீ சொல்றேதெல்லாம் உண்மையா என்றார் விஜயா கோபமுடன் .
ஆமா அத்தை என்றவளின் குரல் நடுங்கியது..
இசை இதுல உன் தப்பு எதுவும் இல்லை... இதுக்கும் உனக்கும் எந்த சம்மதமும் இல்லை...
நீ இத என் கிட்டருந்து மறச்சதுக்கு கூட நான் கோவப்பட மாட்டேன்.. ஏன்னா உன் இடத்தில யாரு இருந்தாலும் இதை தான் செஞ்சிருப்பாங்க... அனா எழில் இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சம் கூட நினச்சு பாக்கல... அவன் சுயநலத்துக்காக ஒரு பொண்ணோட விருப்பத்தை எதிர் பார்க்காம அவளை கல்யாணம் பண்ணிருக்கான்... இதுக்கு எல்லாத்துக்கும் முக்கிய காரணம் நான் தான் இசை... என்னை மன்னிச்சுடு..அத்தை..என்ன அத்தை...நீங்க போய் மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு...
ஆமா மா.. அன்னைக்கு குடும்ப கௌரவம் போய்ட கூடாதுனு உன் விருப்பத்தை கேக்காம கல்யாணம் பண்ணி வெச்சது நான் தான.. நான் தான மா பெரிய தப்பு பண்ணிருக்கேன்..