நான் பெத்த ஒரு பொண்ணாலையே என் இன்னோரு பொண்ணோட வாழ்க்கை கெட்டு போச்சே... பாவி இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு ஒரு வார்த்தை சொல்லிருந்தா அப்பவே இந்த கல்யாணத்தை நிறுத்திருப்பேன்.
ஆனா கடைசி நேரத்தில இப்படி கழுத்தருத்துட்டாளே... இனிமேல் இந்த ஊர்ல யாரு நம்மள மதிப்பா.. நம்ம குடும்பத்தோட மானம் மரியாதை எல்லாமே போச்சே... இனிமே நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என மனம் குமுறினார் மனோகரன்.அய்யோ என்னங்க ஏன்ங்க இப்படிலாம் பேசுறீங்க...நீங்க போய்ட்டா நான் மட்டும் இங்க இருந்து என்ன பண்ண போறேன் நானும் வந்துறேன்ங்க உங்க கூடவே...என்றழுதார் புவனலக்ஷ்மி
அப்பா அம்மா ஏன் மா..அவ ஓடிப்போனதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்.பேசறவங்க பேசதா செய்வாங்க அதுக்காக நீங்க இப்படி பண்ணா எல்லாம் சரி ஆகிடுமா என்ன...நீங்க இப்படி பேசறது மட்டும் இசைக்கு தெரிஞ்சா நிச்சயமா அவ நொறுங்கிடுவா அவ ஏற்கனவே மனசு ஒடஞ்சி போயிருக்கா..
இதுல நீங்க வேற.. அவ இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டது யாருக்காக நம்ம குடும்பம் கவுரவம் கெட வேண்டாம்ன்ற ஒரே நோக்கதுக்காக தான் இந்த முடிவு எடுத்தா.. அவ உங்களுக்காக அவ வாழ்க்கையே ஒருத்தன் கிட்ட ஒப்படச்சிட்டா.. நீங்க என்னடானா சாக போறேன்னு பேசுறீங்க..அந்த பையன் கலையரசிக்கு பாத்தவன் தான.. நல்லவன்னு தான நம்ம பொண்ண கல்யாணம் பண்ணிக்கொடுக்க முடிவு பண்ணோம் அதனால பயப்பட ஒன்னும் இல்லை அவன் பாத்துக்குவான் என்றான் சித்தார்த் அவர்களுக்கு ஆறுதலாக..சரியா சொன்னடா ராஜா என்றார் மஞ்சுளா..
அத்தை மாமா எல்லாம் முடிஞ்சது முடிஞ்சு போச்சு இனிமே பேசி ஒன்னும் இல்லை.. வாங்க வீட்டுக்கு போகலாம்..நீங்க வேணும்னா பாருங்க இசை சந்தோசமா புள்ளக்குட்டியோடு வாழ போறா என்றாள் ஜானகி ஆறுதலாக.
சரி சரி வீட்டுக்கு போகலாம் என்றான் சித்தார்த்