சரி மா நான் பாத்துக்கிறேன்..என்றவன் அவன் அறைக்கு சென்று விட்டான்..
ஒரு வாரம் சென்று இசைக்கு சீமந்த நாளும் வந்தது..
மிகவும் ஆடம்பரமாகவும் ப்ரம்மண்டாமாகவும் குணசேகரன் குடும்பத்தினர் சீமந்த விழாவை நடத்தினர்..
மனோகரன் தன் மகளுக்கான சீர் வரிசையை எந்த குறையும் இல்லாமல் கொடுத்தார் மகிழ்ச்சியுடன்..
அனைவரும் இசைக்கு வளையல் போட்டு சந்தனம் குங்குமம் இட்டு பூ தூவி வாழ்த்தி விட்டு சென்றனர் ...
எழிலின் முகமோ கலையிழந்திருக்க இசையோ முகத்தில் புன்னகை மலராத வாடிய முகமாய் இருந்தாள்..
ரம்யாவோ இசையை பார்த்து முறைத்துகொண்டு நின்றாள்..
இந்த ஒரு மாசம் மட்டும் தான் இசை நீ இந்த வீட்டுக்கு மருமகள்.. அப்புறம் நான் தான் இந்த வீட்டுக்கு மருமகள்.. உன்னை கொலை பண்ணிட்டு நான் ஜெயிலுக்கு போறதுக்கு பதில் உன்னை இந்த வீட்டை விட்டே விரட்டி அடிக்கிறேன்.. எழிலே உன்னை கழுத்த பிடிச்சி வெளிய தள்ளுவான்..பாரு டி என மனதிற்குள் கருவிக்கொண்டாள் ரம்யா...
சீமந்த விழா நிறைவு பெற்றது..
வந்த உறவினர்களையும் நண்பர்களையும் விருந்து வைத்து உபசரித்து அனுப்பி வைத்தனர் ...அன்றைய நாள் முடிந்து மறுநாள் அழகாகவே விடிந்தது...
ரம்யாவின் அறையில் அவள் அமர்ந்திருக்க அவளுக்கு ஒரு அழைப்பு வரவும் அதை அட்டன் செய்து பேச தொடங்கினாள்..
ஹலோ..
ஹலோ ரம்யா நான் தான்மா அண்ணன் பேசுறேன்..
சொல்லுண்ணா என்ன ஆச்சு.. இந்த நேரத்தில போன் பண்ணிருக்க..