வழக்கம் போல் மாலை கல்லூரி முடிந்து இசை தன் வீட்டிற்கு சென்றாள்...
தன் காதலனை இனி கல்லூரியில் பிரிய போகிறோம் என நினைத்தாலும் வீட்டிற்கு வந்து அவள் தன் குடும்பத்தை கண்டதும் அனைத்தும் மறந்து போனது அவள் மனதிலிருந்து....
வீட்டிற்கு சென்றவள் அம்மா.... நான் வந்துட்டேன் என்றவாரு உள்ளே சென்றவள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தன் அண்ணன் மகன் கிஷோர் ஹாலில் அமர்ந்து விளையாடி கொண்டிருப்பதை பார்த்து அவன் அருகில் சென்று என் கிஷோர் செல்லம் ... சின்ன பாட்டி,பெரிய பாட்டி உன் மம்மி, எல்லோரும் எங்க டா வீடே இப்படி அமைதியா இருக்கு என்று தன் கண்களை அங்கும் இங்கும் அலைய விட்டு கொண்டிருந்தாள் இசை.
அத்தே... மம்மியும் பாட்டியும் கோவிலுக்கு போயிருக்காங்க.பெரிய பாட்டி பக்கத்து வீட்டு பாட்டிக்கூட பேசிட்டுருக்காங்க..கலை அத்தை உள்ளே ரூம்ல இருக்காங்க என தன் பிஞ்சு குரலால் இசையிடம் கூறியவன் மீண்டும் தன் விளையாட்டை தொடர்ந்தான்..
ஓகே டா தங்கம் என அவன் கன்னத்தை கிள்ளியவள் நேராக தன் அக்காவின் அறைக்கு ஓடினாள்..
அறைக்கு ஓடிய இசை படுக்கயில் உருண்டு கொண்டிருக்கும் தன் அக்காவை ஓடி கட்டி அனைத்து கொண்டாள்...
பதறி போய் எழுந்து அமர்ந்தவள் அடியே இசை என்ன டி வந்ததும் வராததுமா.பயந்தே போயிட்டேன்.சரி சொல்லு காலேஜ் எப்படி போச்சு.... என்று அவள் கேட்கவும்..
ம்ம் கா ஏதோ போச்சு....
சரி சொல்லு உன் அடுத்த பிளான் என்ன?...காலேஜ் முடிச்சிட்ட அடுத்து என்ன செய்ய போற??என்ன டி நான் சொல்ல.....அம்மா என்ன டா எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடிவு பண்ணிட்டாங்க... இதுல நான் எங்க நெக்ஸ்ட் பிளான் போட... நாளைக்கு மறுநாள் மாப்பிளை வீட்டுக்காரங்க வராங்களாம். இப்போ ரொம்ப முக்கியம் பாரு எனக்கு கல்யாணம்.. என வாடிய முகமாய் கூறினாள் கலையரசி.