சுவாசம் 2

1.8K 16 0
                                    

"என்ன உனக்கு  பசிக்கலயா...?ஹலோ மேடம் உள்ள இருக்கறது  என் பாப்பா...அவளுக்கு  பசிக்கும்ல...வா எழுந்துரு" தன்னவளின் கரம் பற்றி இழுத்தவனை தன் தீ பார்வையால் முறைத்து கொண்டு நின்றவள் இவனால மட்டும் எப்படி தான் இவ்ளோ சாதாரணமா இருக்க முடியுதோ... யாருடைய மனசையும் புரிஞ்சிக்க தெரியாதவன்... சுயநலம் பிடிச்சவன்... இவனுக்கு யாரு எப்படி போனா என்ன... இவனுக்கு இவன் சந்தோசம் மட்டும் தான் முக்கியம்  மனதுக்குள்ளேயே அவனை திட்டி கொண்டிருந்தாள் அவனின் அவள்..

அவன் அன்புடன் அவளருகில் நெருங்கி நின்று "இசை செல்லம் என்னை  திட்டினது போதும்டா...கீழே போகலாம் வா சிரித்து கொண்டே கூறியவனை ஆச்சர்யமுடன் பார்த்தவள் "இவனுக்கு எப்படி என் மனசுல நெனச்சது தெரியும்" என்று எண்ணியவாறே கொண்டு அவனை வெறித்து நோக்க..

தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி "என்ன எனக்கு எப்படி தெரியும்னு தான நினைக்கிற....என் மனசுக்கு பிடிச்ச உன் மனசு நினைக்கிறத கூட புரிஞ்சிக்கமுடியாதவன் இல்லை உன் புருஷன்...உன் மனசுக்குள்ள இருக்கிற அத்தனை கேள்விக்கும் என்கிட்ட பதில் இருக்கு... ஆனா அதை விளக்குற மன நிலைல நான் இப்போ  இல்லை...ப்ளீஸ் இசை வா" என அவன் அழைக்க  அவன் கூறிய சொற்கள் எதுவும் அவளுக்கு புரியாதவளாய் அவனுடன் சென்றாள்..

இருவரும் கீழே செல்ல
"இசை வாடா வந்து சாப்பிடு... இந்த மாதிரி நேரத்தில நீ கரெக்ட் டைம் சாப்பிட தேவையில்லையா "என டைனிங் டேபிளில்  தன் இருக்கையில் அமர்ந்திருந்த சுஜாதா எழுந்து வந்து இசையை தன்னுடன் அழைத்து சென்று அவர் அருகில் அமர்த்தி கொண்டார்...

விஜயா அனைவருக்கும் உணவை பரிமாறிவிட்டு அவரும் அமர்ந்து உணவு உண்ண இசை மட்டும் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கி போயிருந்தாள்..

"இசை "என விஜயா சத்தமாக அழைக்க "ஆஹ்" என தன் நினைவில் இருந்து வெளியே வந்தாள் இசை.

சுவாசமே நீயடி...(முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang