இசை காபி கப்பை அவன் முன்னே இருந்த டேபிள் மீது வைக்க சட்டென அவளை பார்த்த எழிலோ இசை என அழைத்து கொண்டே இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்...
அவன் செய்கையை கண்டு பயந்தவள் வேணாம் ப்ளீஸ் என கத்தி கொண்டு வேகமாக பின்னால் நகர்ந்து நின்றவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது..
வேணா என்ன எதுவும் பண்ணாதீங்க இதுக்கு மேலயும் என்னால தாங்கிக்க முடியாது என அழுது கொண்டே அவள் கூறவும்
இசை...... என்னை மன்னிச்சிடு...
இசை நான் வேணும்னே செய்யல.. நேத்து நான் குடிச்சிட்டு போதையில தான் அப்படி நடந்துக்கிட்டேன்.. மத்தபடி எனக்கு உன்மேல எந்த ஒரு தவறான எண்ணமும் இருந்தது இல்லை..
என்ன மன்னிச்சுடு இசை..என்றான் எழிலரசன் சோகமான குரலில்..ஒரு நிமிடம் அவனை முறைத்து நின்றவள் உங்களுக்கு இப்படி பேச வெக்கமா இல்லை.. மன்னிக்கணுமா?... மன்னிக்கிற செயலா நீங்க பண்ணது... குடிச்சிட்டு வந்தா என்ன வேணா பண்ணலாமா..
இப்போ வந்து நான் தப்பான எண்ணத்துல பண்ணலனு சொன்னா உடனே உங்கள நம்பிடணும்ல.?... நீங்க பண்ணதெல்லாம் சரியாகிடுமா
நானும் நீங்க சொல்றத கேட்டு உங்கள மன்னிச்சுரனும்..நீங்க என்ன ஒரு மனுஷியா கூட மதிக்களல அப்புறம் எப்படி என்ன உங்க மனைவியா ஏத்துக்கக்குவீங்க..எப்படி உங்களால இப்படிலாம் நடந்துக்க முடியுது... நான் உங்கள நல்லவருனு நினச்சு தான் எங்க அம்மா சொன்னதும் சரினு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஆனா நீங்க... ச்சீ.. சொல்லவே வாய் கூசுது...
உங்களுக்கு கல்யாணம் பேசினது நான் இல்லை என் அக்கா கலை...அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா??
அவக்கிட்ட போன்ல சிரிச்சு பேசி பழகினீங்க.. அவ ஓடி போனதால என்னை உங்களுக்கு உங்க அம்மா கல்யாணம் பண்ணி வெச்சாங்க..அவ ஓடிப்போன கஷ்டத்துல தான் குடிச்சிட்டு வந்திங்களா....குடிச்சிட்டு வந்தா உங்களுக்கு எல்லாமே மறந்துறும்மா என்ன...அதெல்லாம் அவ்வளவு ஈஸியா மறந்துட்டு எப்படி உங்களால சாதாரணமா இருக்க முடியுது...நான் கல்யாணத்துலயே கவனிச்சேன் உங்க நடவடிக்கையே சரி இல்லை...