செந்நிற கதிரவன் சமுத்திர தேவியின் மடியில் தவழ்ந்த வண்ணம் விடிந்து கொண்டிருந்தான்......
பறவைகளின் கீச் கீச் சத்தமும் குயிலின் குக்கூ ஓசையும் செவிகளுக்கு இன்பம் சேர்க்கும் வகையிலும் தென்றலின் குளிர்ந்த வாடை காற்று காலையிலேயே வீட்டின் முற்றத்தில் உள்ள துளசி செடியை பூஜிக்கும் இசை என்பவளை தீண்டி சென்றது...
அவளை தீண்டி சென்ற காற்றை சிறுதும் பொருட்படுத்தாமளும் அசையாமளும் தன் சோக கீதங்களை இறைவனிடம் சொல்லி கொண்டிருந்தாள் அவள்..
"இசை இசை " என்று அழைத்து கொண்டே அவள் அருகில் வந்த விஜயா "என்னமா சாமி கும்பிட்டியா? "என்று வினவ...
"ஆமா அத்தை என்ன விஷயம்" என அவள் தன் தலையை உயர்த்தி கேட்கவும்...
"நான் கோவிலுக்கு போறேன்மா இன்னைக்கு வெள்ளிகிழமைல, நீயும் வரியா " என்றவரை சோகமுடன் பார்த்தவள்
" இல்லை அத்தை நான் வரல இன்னைக்கு என்னால வர முடியாது.. செக்கப் போகணும்" என்றாள் அவள் மெல்லிய குரலில்...
"சரி மா.சரி மா..பாத்து போய்ட்டு வாங்க... கோவில பூஜை இருக்கு நான் கிளம்புறேன்" என்றவர் "நான் போய்டு வரேன் மா, தேவியும் துர்காவும் சமையல் அறைல இருக்காங்க நீ போய் சாப்பிடு " என கூறிவிட்டு பூஜை கூடையை கையில் எடுத்து கொண்டு கோவிலுக்கு விரைந்தார்..
விஜயா தன் கண்களில் இருந்து மறையும் வரை அவரை வெறித்து நோக்கியவள் சில நொடிகளுக்கு பின் மாடியில் உள்ள அவள் அறைக்கு சென்று விட்டாள் இசை...
அவள் தன் அறைக்குள் நுழையும்போதே இரு இரும்பு கரங்கள் மலரினும் மென்மையாக அவள் இடையை சுற்றி வளைத்திருந்தது..
ஒரு கணம் பயந்தவள் தன்னவன் என்றறிந்ததும் பெருமூச்சு விட்டு அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு நின்றாள்
அவளை பொய் கோபமுடன் முறைத்துபடி ....