பாகம் -3

776 11 3
                                    

நம் ரதிக்கு எப்பொழுதும் ஒரு பழக்கம் உண்டு.... தூங்கி விழித்ததும் மாடி படியில் கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு அதன் பிறகே எல்லா வேலைகளையும் செய்வாள்....
வழக்கம் போல் அன்றும் அவளின் தாயிடம் சில அர்ச்சனைகளை வாங்கி கொண்டு மாடி படியில் கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.... அப்பொழுது மியாவ் என்ற சத்தம் கேக்க கண்களை விழித்தவள் முன்னே எதிர் வீட்டு சுவரில் பூனை ஒன்று போய் கொண்டிருந்தது.... ச்சை என்று கூறி பூனையை விரட்டினாள்... பூனையை பார்த்தாள் பிடிக்காது, பிடிக்காத விலங்கு அது தான்... பயப்படுவாள்.... ஆனாலும் விரட்டி விடுவாள்....
தன் காலை கடமைகளை முடிக்க குளியலறை சென்றாள்.... அதற்குள் அவளின் தங்கை சாப்டு விட்டு பள்ளிக்கு கிளம்பி விட்டாள்....

❣️❣️❣️❣️❣️❣️❣️
சரியாக ரதியின் வீட்டு வாசலில் காரை நிறுத்திய தீரன் போய்ட்டு வா டா.... சீக்கிரம் வா.... மீட்டிங்க்கு டைம் ஆகுது என்றான்....
டேய்ய் உள்ள வா டா.... கார்ல தான இவ்ளோ நேரம் இருந்த.... உள்ள வா.... உடனே கெளம்பிடலாம்.... எங்க அத்த நல்ல டைப் டா.... ப்ளீஸ் வா....
டேய் உன் அத்த வீட்டுக்கு நீ போற.... நா எதுக்கு என்று தீரன் கூறி கொண்டிருக்கும் போதே தேவி வெளியே வந்து விட்டார்....
" வா டா கார்த்தி.... இப்போ லாம் அத்த வீட்டுக்கு வரவே உனக்கு நேரம் இல்ல ல. "
அப்டிலாம் இல்ல அத்த.... கொஞ்சோ வேலை அதிகம்.... அதான்.... இந்தாங்க.... அம்மா மாவு கொடுத்து விட்டாங்க....

ஓஹ் அப்டியா.... சரி உள்ள வா.... காபி குடிச்சிட்டு போகலாம்....

இல்ல அத்த.... டைம் ஆகிட்டு.... கார்ல என் பிரண்ட் இருக்குறான்.... நாங்க கெளம்புறோம்....

அந்த தம்பிய நா கூப்பிடுறேன்....
தம்பி.... உள்ள வாங்க.... வந்து காபி குடிச்சிட்டு போங்க என அழைத்தார் தீரனை....
தீரன் : இல்ல ஆன்ட்டி... கொஞ்சோ அர்ஜென்ட் ஒர்க்.... இன்னொரு நாள் கண்டிப்பா வரோம்
தேவி : 10 நிமிசத்துல என்ன ஆகிட போகுது.... வாங்க தம்பி....

கெஞ்சி கேட்டவரை மறுக்க மனம் இல்லாது அவரோடு சென்றான் தீரன்....
அவன் முன்னால் கார்த்தி சென்றான்...

தீரன் வீட்டு வாசலில் கால் வைக்கும் நேரம்.... " அய்யயோ விட்ருங்க.... வேண்டா... ப்ளீஸ்.... விட்ருங்க.... கெஞ்சி கேக்குறேன்.... கடவுளே என்ன காப்பாத்து " என்ற பெண்ணின் குரலை கேட்டு அதிர்ந்து நின்றான் நம் தீரன்.... சுத்தி முத்தி பார்த்தவன் எதுவும் இல்லை என்றதும் மீண்டும் காலை எடுத்து வைக்க போக மறுபடியும் அதே குரல்.... ஆனால் இவனுக்கு முன் சென்ற அந்த இருவரும் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றனர்.... நமக்கு மட்டும் இப்டி கேக்குதா.... யாரு இந்த பொண்ணு.... உள்ள நுழைய விடாம இப்டி டிஸ்டர்ப் பன்றா என்ற யோசனையுடன் அங்கே நின்றவனை நிஜ உலகத்திற்கு அழைத்து வந்தது கார்த்தியின் குரல்.....

நீங்க இருங்க தம்பி.... நா போய் காபி எடுத்துட்டு வரேன் என்றார் தேவி....
தீரன் : டேய் எனக்கு மட்டும் தான் அந்த சத்தம் கேக்குதா.... நீ இவ்ளோ அசால்ட்டா இருக்குற....
கார்த்தி : ஏது.... அந்த என்ன விட்ருங்க ப்ளீஸ்.... அந்த சவுண்ட்டா
தீரன் : அப்போ உனக்கும் கேட்டிச்சா.... ஆனா நீ எந்த ரியாக்ஷனும் கொடுக்கலையே டா
கார்த்தி : பழக்கப்பட்டதுக்கு எதுக்கு டா ஓவர் ரியாக்ஷன்
தீரன் : என்ன டா சொல்ற
கார்த்தி : அவ என் அத்த பொண்ணு டா.... சரியான வாயாடி.... வாய் ஒரு நேரம் சும்மாவே இருக்காது.... எதாவது பேசிட்டே இருப்பா.... காலேஜ் படிக்கிறா.... ஆனா இத சொன்னா ஒருத்தனும் நம்ப மாட்டாங்க.... அவ்ளோ ஒல்லியா குட்டியா இருப்பா.... ஆனா அவ இருக்குற இடம் எப்பவும் கலகலனு இருக்கும் டா.... எல்லார்டையும் ஈஸியா பழகிடுவா.... நல்ல பொண்ணு.... குழந்தைங்களுக்கு லாம் ரொம்ப பிடிச்ச கேரக்டர்.... ஆடு,மாடு,செடி னு எல்லாத்துட்டயும் பேசுவா, இப்போ காத்துறாலே.... ஏன் தெரியுமா.... இப்போ குளிர் நேரம் ல.... தண்ணி ஜில்லுனு இருந்துருக்கும்.... அதுக்கு தான் அப்டி கத்துறா
தீரன் : (சிரிப்பு மற்றும் ஆர்வத்துடன் ).... அதுக்கு குளிருது னு சொல்லிருக்கலாமே டா....
கார்த்தி : அதான் சொன்னேனே.... அவ கொஞ்சோ different டைப் னு.... குளிரதையே ஏதோ கொல பண்ற எபெக்ட்ல சொல்றா பாத்தியா.... அதான் டா அவ

" கார்த்தி சொல்ல சொல்ல ஏனோ தீரனுக்கு அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது "
தீரன் : அவ பேரு என்ன டா
கார்த்தி : ரதிநிலா
தீரன் : ( உச்சரிக்கிறான்.... ரதிநிலா )
தேவி : இந்தாங்க தம்பி.... காபி எடுத்துக்கோங்க.....

தீரன் நிலாவை சந்திப்பானா????
                                                                   --- தொடரும்

( ஹாய் பிரண்ட்ஸ்.... யாரும் கதைய பாக்க கூட மாட்டேன்றிங்க.... ப்ளீஸ்.... வாசிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க.... கொஞ்சோ மோட்டிவேஷனா இருக்கும்... ப்ளீஸ் 🙏🏻)

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now