காலை கதிரவன் தன் கதிர்களை
பூமியில் பரப்பி கொண்டிருந்தான்.... மலர்கள் தன் மணங்களை இயற்கை அன்னைக்கு கொடுத்து கொண்டிருந்தன....அவசர அவசரமாக குளித்து முடித்து வேக வேகமாக கிளம்பி கொண்டிருந்தாள் நிலா.... இருக்காதா பின்ன....மத்த நாள் காலேஜ்னா சொங்கி மாதிரி போகலாம்.... இன்னைக்கி ஆட்டம் பாட்டம்னு மஜாவா இருக்க போகுதே.... அதுவும் நம்ம நிலா டான்ஸ்ல தெறிக்க விடுவாளே.... ஆடி கொண்டே காலேஜிற்கு கிளம்பி கொண்டிருந்தாள்....
" அக்கா.... ஐ மிஸ் யுவர் டான்ஸ் பெர்பார்மன்ஸ் என் சோகமாக கூறிய நிவியிடம் சிறு புன்னகையை புரிந்த நிலா
அவள் தங்கச்சியை கட்டி கொண்டு அவள் நெற்றியில் ஒரு இச்சு வைத்தவள் " நிவி குட்டி உனக்காக மொத்த function அயும் வீடியோ எடுக்க சொல்லிருக்கேன்.... எடுப்பாங்க.... நீ ஈவினிங் வந்ததும் நைட்டு உனக்கு லேப்டாப்ல போட்டு காமிக்கேன்.... ஓகே வாதன் அக்காவை அணைத்தவள் .... தேங்க்ஸ் அக்கா என கூற அவளை செல்லமாக அடித்த நிலா அக்கா கிட்ட தேங்க்ஸ் சொல்லாத னு சொல்லி மீண்டும் நெற்றியில் ஒரு இச்சு வைத்தாள்...
ஓகே அக்கா பாய் என கூறிக்கொண்டே பள்ளிக்கு சென்றாள் நிவி....
ஓகே மா.... நானும் கிளம்புறேன்....
ஏய் நல்லா ஆடு டி தேவி கூற
ஓகே மா.... நா பாத்துக்குறேன் என்று கூறியவள் வேகமாக சென்றாள்....
🔥🔥🔥🔥🔥
தீரன் என்றும் இல்லாமல் இன்று ரொம்ப சந்தோசமாக இருந்தான்.... உடற்பயிற்சியை செய்யும் போது கூட அவன் மனம் முழுவதும் அவளின் நியாபகம் தான்....
குளித்து முடித்து தனக்கு மிக கச்சிதமாக பொருந்த கூடிய வெள்ளை ஷர்ட்,கருப்பு பேண்ட்,கருப்பு கோட் அணிந்து தன் சட்டையில் முதல் பட்டனை எப்பொழுதும் போல் கழட்டி விட்டவன் தன் சிகையை சீப்பால் சீவிக்கொண்டு இருக்க...
ஹாய் மச்சான்.... குட் மார்னிங் என உள்ளே நுழைந்தான் கார்த்தி..... ஒரு நிமிடம் தீரனை கண்கள் விரித்து பார்த்தவன் " டேய் மச்சான் வாழ்க்கைலயே first டைம் நா பொண்ணா பொறக்கலையே னு வருத்தபடுறேன் டா என கூற....
காரணம் அறிந்த தீரனோ சிரிப்பை இதழுக்குள் அடக்கி மறைத்தவன் " ஏன் டா என கேட்டான்
இல்ல.... நீ செம்ம அழகா இருக்க டா..... நா பொண்ணா பொறந்துருந்தா உன்னையே கல்யாணம் பண்ணிருப்பேன் என தீரனின் கன்னம் தாங்கி கூற....
வாய் விட்டு சிரித்த தீரன் அவனை தள்ளி விட்டு " மச்சி.... நா என் பொண்டாட்டிய பாக்க போறேன் டா.... உனக்கு டைம் இருந்தா நீயும் வா என கூறியவன் வேகமாக காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் கல்லூரியை நோக்கி....
🥳🥳🥳🥳🥳🥳
கல்லூரி....
காலேஜ் முழுவதும் பூக்களாலும் கோலங்களாலும் அலங்கரிக்க பட்டிருந்தது.... 🎊🎆🎉🎈🎆🎀 இவ்வாராக சுவற்றிலும் கரும்பலகையிலும் மாணவர்களின் கை வண்ணங்கள் நிரம்பி வழிந்தது....
கலை நிகழ்ச்சிகள் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாக இருக்க பங்கேற்பாலர்கள் அனைவரும் தங்கள் நிகழ்ச்சிக்கான உடைகள்👚👗🧦👔🥻👠,அணிகலன்கள்📿👑👒 போன்றவற்றை அணிந்து ரெடியாகி கொண்டிருந்தனர்.... ஆடியன்ஸாக அமர்ந்திருக்கும் மாணவ மாணவிகளும் மேக்கப் செய்து கொண்டு இருக்கையில் வந்து அமர்ந்தனர்....
இதோ கல்லூரியின் chairman வந்து விட.... அவரை மலர் தூவி வரவேற்றனர் நம் மங்கைகள்.... ஆனால் வந்தவனின் கண்கள் தேடியது என்னவோ தன்னவளை தான்....
அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்த chairman பக்கத்தில் கல்லூரியின் முதல்வர்,துணை முதல்வர் என அனைவரும் அமர.... வரவேற்புரை இனிதாக பல கரகோசங்களுடன் நடந்தது..... 👏🏻👏🏻👏🏻🥳🥳🥳

YOU ARE READING
அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚
Short Storyஇது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் என்பதை ஆணவனுக்கும் உணர்த்தும் கதை